பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ஜாதி ரோஜா

கூடத்தை அடுத்திருந்த அவளது அறையில் நுழைந்தாள் அழகி ; இதுவரை உணர்ந்திராத புதிய திகில் ஏற்பட்டது. கையி லிருந்த அந்தப் புத்தகத்தை அலுப்புடன் விசிப் போட்டாள். அதற் குள்ளே யிருந்து ஓர் உறைக் கடிதம் பிரிந்தது.

“அன்புமிக்க மருமகள் அழகிக்கு,

உன்னிடம் நேரில் சொல்ல நிதினத்த விஷயங்கள் இவை. உன் வாழ்வைப் பாலைவனமாக்கி விட்டதற்கு என்னை மன்னித்து விடு. என் வாழ்வின் கடைசிக் கட்டமும் இன்றாே நாளையோ என்று நெருங்கிக் கொண்டிருக்கிறது. நான் பெற்ற மகனே என்னை விஷமிட்டுக் கொல்ல முயன்றிருக்கிருன். அத்தகைய பாவி, எனக்குப் பிறகு உன்னை என்ன பாடுபடுத்துவானே தெரியாது.

நீ புதிய ரோஜா , அதிலும் ஜாதி ரோஜா. நீ வாடிக் கருகி மண்ணுேடு மண்ணுக மக்கி வீணுகப் போய்விடக் கூடாது. கி. மணம் பரப்பவேண்டிய இடமும் இல்லாமல் இல்லை. உன்னுடைய முறை அத்தான் முரளி உன்பேரில் ஒரே பைத்தியமாக இருக் இருன். ஆரம்ப நாளிலே நீங்கள் பழகிய விவரங்களையும் கேட்டுத் த்ெரிந்துகொண்டேன். உனக்கும் அவர்மீது ஆசை யிருக்கு மென்று நம்பியே நான் உன்னிடம் ஒரு வேண்டுகோளை யாசிக் கிறேன். உன்னை முரளியுடன் மனப்பூர்வமாக ஒப்படைக்க நான் தயார். நீ இதயம் திறந்து சிரிக்கத் தொடங்கிவிட்டால், நான் நிம்மதியாகச் செத்துப் போவேன். உன்னுடைய எதிர்காலத்தை யும் உன்னுடைய கனவுகளையும் அழகேசனின் காலடியிலே ஒப் படைத்த ,ே புனிதம் நிறைந்த உன்னுடைய இருதயத்தை முரளி யிடம் அடைக்கலம் வைத்து விடுகின் ருயா ? அழகேசன் பேரில் நீ வழக்கு தொடுப்பதாகவும் நான் கேள்விப்பட்டேனே ?. உன் பதில் தெரிந்துதான், அழகேசனைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வர வேண்டும் , என் சொத்துக்களின் உரிமைக்கும் உயில் தயார் செய்யவேண்டும். - - -

இப்படிக்கு உன் மாமனுர்,

சோமநாதன்.’

தண்மதி உதிர்த்த கண்ணிர் விண் எங்கும் காட்டாற்றின் வெள்ளமாகப் பாய்ந்தது :