பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. இறங்காத விஷம்-மாருத சாபம்

ஜார்ஜ் டவுனில் செம்புதாஸ் தெரு அவ்வளவு பிரசித்தமென்று சொல்ல முடியாது. அங்கே இரும்புக் கடைகள் பலவுண்டு. அதே மாதிரி தங்கமான உள்ளங்களும் இருக்கின்றன.

அதிசயமான உலகத்திலே உள்ளங்களைக் காட்டுவார்கள் கதாசிரியர்களும் கதாசிரியைகளும் ; இவர்களுடன் நாவலாசிரியர் களும் நாவலாசிரியைகளும் கை கோத்துக் கொள்ளுவது அதிசய மல்ல. உள்ளங்களில் உலகத்தையும் காட்டத் தெரியும், தனிப்பட்ட இந்த இனத்தவர்களுக்கு. இவர்களின் உலகமும் உள்ளமும் அலாதி, ஆல்ை, ஒதுங்கி விடாது-அதாவது, இவர்கள் ஒதுங்க அனுமதி தரமாட்டார்கள் ரசிகர்கள்,

செம்புதாஸ் தெருவில் இருந்த பொன் நெஞ்சங்களில் குறிப் பிடத் தகுந்த பெயர்கள் : ராமலிங்கம், அவரது மனைவி சுசீலா, இந்த அம்மணியின் தம்பி கரிகாலன்: ‘ .

அன்றைக்கு வெள்ளிக்கிழமை.

சுசீலா குளித்து முழுகினுள். சுருள் அலை படிந்த கேசத்தில் ஒட்டிக் கொண்டிருந்த ஈரத்தைப் பிரிக்க முயன்று கொண்டிருந்தாள். பிறகு, கூடத்திற்கு கடந்தாள். பீரோ ஏந்தி நின்ற கண்ணுடி, அவள் உருவத்தைப் படம் பிடித்துக் காட்டியது. கெற்றி மையம் குங்குமம் தாங்கியது. தன்னைத் தானே-தனக்குத் தானே ஒரு முறை பார்த்துக்கொண்டாள். நெஞ்சம் தாங்கிய பிஞ்சின் இன்ப் நினைவு அவளைத் திக்குமுக்காடச் செய்தது. பல் இடுக்குவரை வந்த நமட்டுச் சிரிப்பு இதழ்க்கடை வ்ழியாகவும் எட்டிப் பூார்த்தது. வடிவாம்பிகை அம்மன் நினைத்தாள். வயிறு நிறைந்ததுபோலவே நெஞ்சும் நிறைந்து விட்டது. & . . . . . . . . . .

காப்பி கொண்டு வந்தாள். ராமலிங்கமும் கரிகாலனும் பருகி ஞர்கள். தம்ளர்களை சமையல்றையில் வைத்தாள். தெருவில் காய்கறி வண்டிக்காரன் புரியாத ப்ாஷையில் பெரிய குரலெடுத்துக் ஆ.விக் கொண்டிருந்தான். சாமான்கள் வாங்கி முடிந்து திரும்பும் போது, தொலைவிலே ஓர் உருவம் தென்பட்டது. உன்னிப்பாகப் பார்த்தாள் சுசீலா. ஆமா, அழகியேதான் ! என்று அவள் தீர் மானித்ததுதான் தாமதம்; மறுகணம் அவளையும் அறியீழ்ல் அவள்,"அழகி.அழகி ‘ என்று கூச்சல் போட்டாள். அழகியின்

8