பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நீலக்கடல் அலை

கண்ணுமூச்சி என்றால் ரொம்பவும் இஷ்டம். அதற்காகத்தான் அந்த வெண்பஞ்சுக் கும்பல்கள் அழகு நிலாவை அண்டி அண்டிச் சென்றன. நிலவுக்கு நாடாறு மாதம் என்றால்தான் கொஞ்சம் தென்பு வரும். இந்தக் குறைந்த வேளையில், மேகங்களின் இம் மாதிரி நச்சரிப்பு என்றால், பிறைமதிக்கு ஆத்திரம் ஆத்திரம்ாக வரும். ஆகவேதான், அது விலகி விலகி ஓடியது.

கரிகாலன் அந்தக் கடுதாசியைச் சுருட்டிச் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டான் ; மூளை சூடேறி விட்டது; புத்தி குழம்பி விடும் போலிருந்தது. ப்ொல்லாத சிந்தனைகளுக்கு மணியம் கொடுத்துவிட்டால், நிமிஷத்துக்கு நிமிஷம் கொட்டக் கேட்கவேண் டுமா ? தன் நினைவு சிலிர்த்தெழுந்தது. அவன் என்றால், அதற்குக் கடமைக்கும் அப்பாற்பட்ட அன்பு. எழுந்தான் ; கடல் மணலைச் சுருட்டிக் கொண்டுபோக அவனுக்கு உரிமை கிடையாதல்லவா ? எனவே, நின்றது நின்றபடியே, சட்டையை உதறின்ை ; பையை உதறினன், கைக்குட்டையையும் சேர்த்து உதறினன். உடம்பைச் சோம்பல் முறித்துக்கொண்டான். ஒளிக்கதிர்கள் சில அவனுடைய முகத்தில் கண்ணுமூச்சி விளையாடின் ; சற்றுமுன் மணல் பட்டபாடு தெரியும் போலிருக்கிறது-பைய நழுவி ஓடி விட்டன.

கரிகாலன் மெல்ல நடந்தான் ; சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு ஈ, காக்கை இருக்கவேண்டுமே ? ஊஹஅம்...! அவன் இப்போது தனி மனிதன்-ஆதி மனிதன் அல்ல !

முன்னம் ஒரு நாள் ஊழிக்கூத்து ஆடினராமே, ஆண்டவன்? ஒருகால், இந்த அலை கடலேத்தான் ஆடரங்காக ஆக்கிக் கொண் டாரோ ?-சாந்தியைப் பிறப்பிக்கும் சாந்தி பூமிதான் அவரது கூத்து மேடை என்று தெரிந்தவர்கள் சொல்வதுண்டு. பின், ஏன் இப்படி இந்தக் கடல் சினந்து சீறி எழுகிறது? ஒஹோ. பொங் கும் உள்ளங்களுக்கு அமைதி தந்த பிறகு ஏற்பட்ட வறட்சியோ ?... ஆனந்த வெறியோ ? . - o காலத்தின் மணல் வெளியில் பதிந்த அடிச்சுவடுகள் ஈரம் காய்ந்து உலர்ந்து போய்க்கொண்டிருந்தன. -

கடற்கரையின் பாதத்தில் அடையாளம் பரப்பிக்கிடந்த நிழல்மனித நிழல் முன்னேறியது.