பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறங்காத விஷம்-மாருத சாபம் ! 123

சுசீலா தன்வயப்பட்டாள். ஏறக்குறைய அதே நிலையில்தான் அழகி இப்பொழுதும் காணப்பட்டாள். - . . . . . ; * அக்கா, எனக்கு ஏகப்பட்ட அலுவல்கள் இருக்கு. நான் இன்றைக்கே தஞ்சாவூருக்குப்போகவேணும்; அதற்குள்ளே உங் களைப் பார்த்துப் போகத்தான் வந்தேன். லெட்டர் போஸ்ட் பண்ண வேண்டி யிருந்துச்சு. தபாலை பெட்டியிலே போடவேணும் என் கிற ஞாபகங்கூட இல்லை, ஒடி வந்திட்டேன். ! ? என்று கூறினுள், அழகி. அவளது விரல் இணைப்பில் தூங்கி வழிந்தது உறைக் கடிதம் ஒன்று. சூரியனின் இளங்கதிர்கள் அந்தக் கடிதத்தின்மீது விளையாடின. தலைப்பில் எழுதப்பட்டிருந்த விலாசத்தைத் தற்செய. லாகக் கவனித்தாள் சுசீலா. முள் எடுக்கும் நேரம் வரை அவளுக் குக் கையும் காலும் ஒடவில்லை. அழகி அவளுடைய மாமனருக் கல்லவா கடிதம் எழுதியிருக்கிருள் போலிருக்கிறது ? அப்படி பென்றால்...இவள் அங்கே இல்லையா?. ஒரு வேளை, அந்த் வேதாளம் அழகேசன் பழையபடியும் முருங்கை மரத்தில் ஏறி, விட்டாரோ, என்னவோ ? என்று சிந்திக்கத் தலைப்பட்டாள்.

  • அழகி, எனக்கு வயசு ஆனதுதான் மிச்சம். பார்த்தாயா, வந்த காலோடு உன்னை வழியில் நிறுத்திவச்சுப் பேசிக்கிட்டிருக் கேன்,’ என்று சொல்லி, அழகியை விட்டிற்குள் அழைத்துச் சென் ருள் சுசீலா. குடும்ப ரேடியோ காலைச் செய்திகளை ஒலி பரப் பியது. ‘ அழகியா ? ? என்று ஒடோடி வந்தான் கரிகாலன். அவனைத் தொடர்ந்து, கையில் பிரிந்து கிடந்த தினசரியுடன் கடந்து வந்தார் ராமலிங்கம். - o:

‘’ அழகி, உங்கள் அந்தி நிலா மிகவும் விறு விறுப்பாக ஓடுகிறது ; என் நண்பர்கள் எல்லோரும் ஒருமுகமாகப் பாராட்டு: கிறார்கள். கதையென்றால் காததுரம் பயந்து செல்லும் எங்கள் செக்ஷன் சூப்பிரண்டெண்ட்கூட உங்கள் தொடர்கதையைச் சேர்க்க ஆரம்பித்து விட்டாராம் ஆண்களே இப்படி யென்றால், பெண்கள் வட்டாரங்களில் உங்கள் எழுத்துக்களுக்கு அமோக மான வரவேற்பு இருக்கும் என்பதிலே சந்தேகமே கிடையாது

இலக்கிய ஆர்வத்துடன் வார்த்தைகளைச் சரமாரியாக வெளி யேற்றினுன் கரிகாலன். . . . . .

ரொம்பவும் புகழ்கிறீர்கள். நன்றி. நீங்கள் எனக்குப் புகழ்ப் :புராணம் பாடியதற்கல்ல, என் பேரில் நீங்கள் வைத்திருக்கும். அன்புக்குத்தான் இந்த நன்றிக் கடன்,’ என்று சிரித்தாள்-சிரிக்க முடியாதவள் ! . , இப்போதைய எழுத்தாளர் வட்டாரத்திலே,நீங்கள் ஒரு தனி. ரகம். எழுத்தாளன், கலைஞன், இவர்களுக்கெல்லாம் புகழ்தான்