பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறங்காத விஷம்-மாருத சாபம் ! 125

கில் ஆகிவிட்டதே ... சுசீலா அக்கா, நான் அபாக்யவதி-தாலி மார்பில் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்த போதிலும் ...நான் கொடுத்து வைக்காதவள்-நிதி தந்த வாழ்வு மைலாப்பூரிலே எனக் காகக் காத்திருந்த போதிலும். ‘ -

அறியாப் பருவம் தாண்டிய குழந்தை ஒரு காரணத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, மேற்படி காரணத்துக்குரிய காரியும் செயற்படாமலிருக்கக் கண்டு கதறி அழுமல்லவா, அந்தப் பாங்கிலே அழகி அழுதாள். -

‘தங்கச்சி.!’ அழைப்பு வந்தது; அது விம்மலையும் கூட்டி வந்தது.

வழிந்த கண்ணிர்ைப் பிழிந்துவிட மனமில்லை. எம்பித் தணி யும் நெஞ்சைச் சாந்தப் படுத்தவும் மறந்தாள்.

‘அக்கா, என்னைத் தங்கச்சி என்று அழைத்தீர்கள். முதன் முறையாக, என்னை நானே மறந்து போனேன். உங்களோடு உடன் பிறவாத தங்கச்சி நான். ஆஹா, எனக்கும் ஒரு அக்காள் இருக்கிறார்கள். இனி நான் யாருக்கும்-எதற்கும் பயப்படத் தேவை யில்லை. அக்கா, முதலில் என்னை மன்னித்துவிடுங்கள். உங்க ளிடம் பொய்சொல்லி, இங்கிருந்து விடைபெற்றுச் சென்று, பிறகு உலகை விட்டே பிரிந்துவிடத் தீர்மானம் செய்திருந்தேன். ‘

‘ஆ !’ என்றாள் சுசீலா. “ என்னை மன்னித்து விடுங்கள்.அக்கா...மன்னித்து விடுங் கள் !” - - -

  • அழகி, முதலிலே இந்தக் காப்பியைச் சாப்பிடுங்கள். அப்பு றம் ஆற அமர உட்கார்ந்து பேசுங்கள், அதுதான் அக்காளுக்கும் நல்லது.” என்று தெரிவித்த கரிகாலன், பத்திரமாக காப்பி டபரா வையும் தம்ளரையும் அழகியின் கையைத் தொட்டுக்கொடுத்தான். பாசத்தின் ஜீவநாதம் உயிரைத் தழைக்கச் செய்யும் அருமருந்தா பிற்றே! - -

அழகி முதலில் கண்களைத் துடைத்தாள்; பிறகு பட்டுப்புடவை யின் தலைப்பு:உதடுகளில் இழைந்தது. : * -

அழகி, என்னென்னவோ உளறுகிருயே? நீ ஏனம்மா ஊரை விட்டு, உலகத்தை விட்டுப் போகவேண்டும்? அப்படியெல்லாம் அபசகுன்மாக இனிப் பேசக்கூடாது. இன்றிலிருந்து நீ எனக்குத் கட்டுப்பட்டவுள். கான் உன் தமக்கை. ஆதலால், நீ என் திெல்: தட்டமாட்டாயென்று நம்புகிறேன். உனக்கு ஒரு தமையனும் இரு