பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறங்காத விஷம்-மாருத சாபம் ! 127

அப்படி யென்றால்....??

ஐயோ...என்ன அக்கா திரும்பத்திரும்ப குண்டு போடுகிறீர் களே?....என் மாமாவின் இந்த்க்கடிதம் கிளப்பிவிட்ட புயல், எரி மலை, பூகம்பம் எல்லாம் என் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கின் றனவே, போதாதா ?....அக்கா நான் தமிழ்ச் சாதிப் பெண் . எனக் கென நானே வகுத்துக் கொண்டிருக்கும் ஒரு கோடு உண்டு ; அதற்கு ஒரு முடிவும் இருக்கிறது. காலம் வரும்; விளக்கமாக உங் களிடம் என் இதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். ஆனால், முரளியிடம் என் கைகளை ஒப்புவிப்பேனென்று நீங்கள் கனவு காணுகிறீர்களா? அப்படி யிருந்தால், அது என் துரதிர்ஷ்டம்தான். அதற்காக, என்னை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையே யென்றெண்ணி அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசிவிடமாட்டேன் ! உங்களிடம் எனக்கு மட்டு மரியாதை நிறைய உண்டு. அக்கா, என்னைப்பற்றி, பல விவரங்களை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. இப்போதைக்கு என்னைப் பற்றியும் அத்தான் முரளியைப்பற்றியும் மாத்திரம் ஒன வுக்குச் சொல்லுகிறேன், முரளி அத்தான் என் நினைவிலும் நெஞ் சிலும் நீக்கமற நிறைந்திருந்த காலம் ஒன்று உண்டு. அந்தக் காலம் தான் என் பிஞ்சுப்பருவம். அப்போது பஞ்சும் நெருப்பும் பக்கம் பக்கமாக இருந்தன. ஆம் ; நாங்கள் ஒன்றுசேர்ந்தே உண்டோம்; விளையாடினுேம் ; உறங்கினுேம் ; கதிரவனின் முத்தத்தில் நாங்கள் எழுப்பிய அந்த மணல் வீடுகளைக் கேட்டால் கூட எங்கள் அன்பை -அபிமானத்தை-பாசத்தைச் சொல்லும். சோழகுலம் தழைக்கப் பாடுபட்ட இராஜராஜனின் கோயிலிலே நாங்கள் போட்ட ஆட்டங் கள் கொஞ்ச் நஞ்ச மல்ல. தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனிலே வந்து கிற்கும் ரயில்களைக் கண்டு நாங்கள் அடைந்த குதுகலத்துக்கு அளவே யிருக்காது. ஒரு நாள் நாங்கள் இருவரும்புருஷன்-பெண் சாதி விளையாட்டு விளையாடினுேம். அப்போது அத்தான், அழகி, அழகி ! நீ என்னைத்தான் அப்பாலே கட்டிக்கிடணும்’ என்று கெஞ் சினர். கையடித்துக்கொடுக்கும்படிங்ச்சரித்தார். சரியென்று ஆவ் வாறே செய்தேன். ஆளுல், விதி என் இதயத்திலிருந்த அத்தானின் அழகுருவத்தை அழித்து விட்டது. பாவம், என் அத்தான் முரளி இப்போது தாறுமiருகக் காணப்படுகிருராம் ! நாலு பேர்கள் காலு விதமாகச் சொன்னர்கள், ஏன், நானும் கண்டேன். கான்_கூட அவரை அன்று முறைeறித் திட்டிவிட்டேன். நடந்துவந்த நெடுக் துரத்தை எண்ணினுல் பெருமூச்சு வருகிறது. கடந்து வந்த நெருஞ்சிமுள் காட்டை நினைத்துக் கண்ணிர் பெருக்குகிறேன். கடந்தி துர்மும் கடந்த காடும் என்க்கு ஒர் அயோத்தியாகத் தோன்றி யிருக்கிலாம்-சீதாப் பிராட்டிக்குக்கின்டத்த அந்த ரீமன் ர்டியிர னைப்போன்று எனக்கும் கிடைத்திருந்தால்!..! பெண்ஞ்கி உல்வ