பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ஜாதி ரோஜா

தன் தோழி செந்தாமரை கூடகமாகப் பேசிய பேச்சின் குரலை நிதான்க்க மாட்டாமல் விழித்தாள் அழகி.

என்னம்மா சொல்றே நீ ?...’ என்று கேட்டார் சோம நாதன்.

இவ்வளவு நாழிகை வாய் மூடியிருந்த கஜேந்திரன் பெரியவ ரிடம் போய், ! ஐயா, இப்போதுதான் உங்கள் பையனுக்குக் கண் கள் திறந்திருக்கின்றன. திறந்த கண்களை கன்றாக விழித்துப் பார்க் கிற நேரத்திலே, மறுபடியும் கண்களை மூடிக்கொள்ளச் செய்து விட்டீர்களே, சோமநாதன் ‘ என்று உரிமையுடன் வாதாடினர்.

ஐயோ, அந்தப் பாவியின் கண்கள் திறக்கவே வேண்டாம். மூடியே இருக்கட்டும். ஐயா, இந்த ஒரு உதவியையும் எனக்குச் செய்யுங்கள் ; ஒரு வேளை திறந்திருந்தாலும், அவன் கண்களைக் கோந்து போட்டு ஒட்டி விடுங்கள். இல்லையானல், அவன் தன் னுடைய பாவக் கண்களால் என் குல தெய்வத்தைச் சுட்டெரித்துச் சாம்பலாக்கி, அதை நெற்றியில் பூசிக்கொண்டு உலகத்தையே அழித்து விடுவான் ... அவன் போகட்டும், தொலையட்டும் !...” என்று வீறுகொண்டு கத்தினர் சேர்மநாதன்.

எல்லோருக்கும் நாற்காலிகள் கொண்டு வந்து போட்டான் கரிகாலன். பெரியவர் நாற்காலியில் குந்தப் போனர்.

அப்படியென்றால், எங்கள் அழகியின் தாலிக்கு யார் பதில் சொல்வது ?’ என்ற சொற்களைத் தூவிக்கொண்டே அண்டி வந் தாள் தாமரை. அவளது முகத்தில் பாத்தி கட்டி ஒடிக்கொண் டிருந்த ரத்தம் அவளுடைய கண்களுக்குப் பாய்ந்தது.

என்ன ?..’ என்று சொன்ன பெரியவர், வார்த்தைகளுக் குத்_தொடர்பிணைத்துப் பேச முடியாமல், கட்ட மரம் போல இப் படியே எழுந்து நின்றார்.

தலையில் கையை வைத்த வண்ணம் நாற்காலியில் உட்கார்ந்து விட்டாள் அழகி. ஐயோ அம்மா !” என்று முனகினுள் அவள்.” “ செந்தாமரை, எல்லாவற்றையும் அப்புறம் பேசிக் கொள்ள லாம். மறுபடியும் அழகிக்கு மயக்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். போய்க் கவனி அழகியை !’ என்று யோசனை கூறி ன்ை முரளி, நல்ல மாற்றம் ! -

முரளியையும் செந்தாமரையையும் மாறி மாறிப் பார்த்தார் சோடிகாதன். அழகி விரும்பினால் கைகளில் aj டைக்கத்துமக்குச் சம்மதம் என்று தெரிவித்த பழைய கடிதத்ை

t-I பைத்தியம் பிடித்தவர் போல் . அடித்துக்கொண்டார். வாதம்கெட்டால் பைத்தியம் என்பார்களே !