பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீலக்கடல் அலை 15

கல்யாணக் கொட்டகையில், பாவம் , இருந்திருந்தாற்போல அழகிக்கு மயக்கம் வந்துவிட்டது ; சுய நினைவே இல்லையாம் ! என்று எதிரொலித்த வார்த்தைகள் காதுகளில் டேரா போட் டன; கண்களில் அழகி தோன்றினுள், மாலையும் கழுத்துமாகமுல்லை முறுவலும் முதற்பிறையுமாக. குழப்பமான எண்ணங்களைத் தான் மனத்திற்குப் பிரதிபலிக்கத் தெரியுமோ? இந்த மனம் பலே சந்தர்ப்பவாதி!

ஜார்ஜ் டவுன் அவனே வா, வா’ என்று ஜாடை காட்டி, மோடி பண்ணிக் கூப்பிட்டது. நடந்தான். பாதரஸ் விளக்கு மாதிரி ஒளிர்க் தது நிலவு. வால்யூம் சரிப்படுத்தப் படுவதற்குள் ரேடியோ கர புர வென்று ஓலமிடும் பாவனையில் கடல் முழக்கம் செய்தது.

மெரின நீந்தும் குட்டைக்கு இரவு வணக்கம் தெரிவித்தான். மாகாணக் கல்லூரிக் கட்டடத்துக்கும் சேர்த்துத்தான். வழி வளர்ந் தது.கடந்தான்; நடந்து கொண்டே இருந்தான். - - பிறந்த மண்ணில் பிஞ்சுக்கால் பதித்துக் குறுநடை பழகத் துடிக் கும் பிள்ளைக்கனி பின்னி விழுவதுண்டே?-அந்தப் பாணியில் அவன் கால்கள் தடுமாறின. விழப்போனுன். பார்வை தரைக்குச் சாடி ஓடியது. திரைப் படங்களில் தொற்றிக் கொண்ட பெருமை யில் அந்தப் பாலம் கர்வம் ஏறிக் காணப்பட்டது.

மறுகணம், ‘ஆ’ என்று விரிட்டான் கரிகாலன்.

மந்திர சக்தி வாய்ந்த இந்த இரவு வேளையிலே, ஆயிரக்கணக் கான கனவுகள் உருப் பெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் பொழு திலே, அழகே உருவான மோஹினிப் பெண் ஒருத்தியா ?

அவனுக்குத் திக்கும் புரியவில்லை; திசையும் மட்டுப்பட மறுத் தது. கை நொடிப்பொழுது கடந்திருக்கும். ஆ!...அழகி ‘ என்று கூப்பாடு போட்டான். நினைவு தடம் புரண்ட நிலையில் அவள் தரை யில் சய்ந்து கிடந்தாள். கல்யாணப் பெண்ணுக்கு மயக்கம் வந்து விட்டதாக எழும்பிய பேச்சும் சிந்தைக்குள் முடங்கிக் கொண்டது. சற்றுமுன், மெரினுவின் விளிம்பில் கிடந்தெடுக்கப்பட்ட அந்தப் பை, பேணு, புத்தகம் முதலியனவற்றையும் மனக்கண் எடுத்துக் காட் டிற்று. மனக்கண் இருக்கையில், இந்த டெலிவிஷன் எதற்காம் ? அவளுடைய முகத்திரை தெப்பமாக நனைந்து கிடந்தது. பண். பைக் காக்கத் துடித்த மார்புச் சேலைக்கு அரண் கட்டிக் காத்துக் கிடந்தது அந்த மங்கல நாண், சேலைத்தலைப்பில் அங்கங்கே தண்,

னிர் சொட்டியது. -

அவளுடைய பூங்கரத்தில் சஆழ்ந்து கிடந்தது ஒற்றை ரோஜாப் பூ.மெல்ல அதை எடுக்க எண்ணிஞன். அதன் மூலமாவது அவள்