பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லதோர் வினை செய்து... ! 3

அவள் அபலையாச்சே, அக்கா ?” ‘ அழகியைப் பற்றிக் கவலே கொள்ளத்தான் அவள் புருஷன் அழகேசன் இருக்கிருரே ‘

உலகமே அறியாதவர் கணக்கில் பேசுகிறீர்களே ?” உலகம் அறிந்ததால்தான் இப்படிப் பேசுகிறேன் !’ “ அப்படியென்றால் அன்பு காட்ட வேண்டாமென்று சொல் கிறீர்களா...??

  • நான் பேயல்ல , பெண் ! அன்பு செலுத்தப்படுவதற்கு இடம், பொருள், ஏவல் என்றெல்லாம் இருக்கிறதே ?” -

அபலை ஒருத்தி அைைதயாகத் தன்னை மறந்து வழியிலே கிடந்தாள். பட்டு மெத்தையிலே எழில் சிந்திக் கிடக்கவேண்டிய ரோஜா, கடற்கரை மணலிலே உலர்ந்து கிடந்தது. மனச்சாட்சியின் இருதயத்தில் அமர்ந்து, சத்தியத்தின் பக்கபலத்துடன் அழகியைக் காப்பாற்றி, தமிழ்ப் பண்பின் மூச்சுடன் அவளை இங்கு கொண்டு வந்து உங்கள் வசம் அடைக்கலம் வைத்தது என் தவரு ?”

  • விதியின் பிழை என்றுதான் என்னுல் சொல்ல முடியும் !”
  • ஆண்டவன் படைத்த உடலிலே, மனிதன் படைத்துக் கொண்ட உள்ளத்தைச் சூன்யமாகத்தான் வைத்துக்கொள்ள வேனுமா, அக்கா ?” -
  • ஒரே வரியில் சொல்லி விடுகிறேன், கரிகாலா. அழகேசன். புராண காலத்தில் பிறந்திருக்க வேண்டிய வில்லன். அவனுடைய சொந்த வாழ்க்கையில் குறுக்கிட உனக்கு அதிகாரம் கிடையா தல்லவா? இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு நிச்சயமாகக் குலே அறுப்பான் !...”

வார்த்தைகளைக் கச்சிதமாக அளந்து பேசுகிறீர்கள் உங்கள் யோசனைக்கு-புத்திம்திக்குத் தலை வணங்கக் கடமைப்பட்ட, வன் நான். ஆனால், அழகியை நினைக்கிறபோது-அவள் தலையில் விழுந்த வெடி, வெடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறதை எண்ணுகிற: பொழுதுதான்-மனசுக்குத் தாங்க முடியவில்லை, அக்கா.” - வம்பை விலைக்கு வாங்கத் தீர்மானம் செய்து விட்டாங் போலிருக்கிறது ? - .

இல்லை, இல்லை 1 அன்பை விலைக்கு வாங்க எண்ண. மிட்டுக் கொண்டிருக்கிறேன்...’

“ அப்படியானல், உன்னுடைய கல்யாணத்தைப்பற் முடிவுதான் என்ன ?”