பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஜாதி ரோஜா

ஒரு கல்யாணம் குழப்பத்தை உண்டுபண்ணி விட்டது. கண்கள் கண்ட கனவு கானல் கண்ட கனவாகிப் போய்விட்டது. அழகி தீக்கொழுந்திடைப்பட்ட செவந்திப் பூவாகக் கருகி உலர்ந்து கொண்டிருக்கிருள். இங்கிலையிலே இன்னொரு கல்யாணம் கூடவும் வேண்டாம்.-ஒருமனப்பட வேண்டியவர்கள் இருமனப்படவும்

வேண்டாம்-நீங்களே என் சார்பில் எழுதிவிடுங்கள், அக்கா.” -

  • அப்படியென்றால் நீ சொல்கிற அந்த அன்புக்கு அர்த்தம்?...’ * அந்த அன்பு அசல் அன்பேதான். தூய அன்பு அது ; தெருவிலே நடைவண்டி ஒட்டிச் செல்லும் பிள்ளைக் கனியமுது அலறிக் கீழே விழுந்துவிட்டால், நாம் ஒடிப்போய்க் குழந்தையைத் தூக்கியெடுத்து அன்பு காட்டுகிருேமில்லையா ? அதே அன்பு தான்.”-கரிகாலனின் நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது. எதிர் பாராத தாக்குதல்கள் ; வேண்டாத கேள்விகள் ; விரும்பாத சந்தே கங்கள். அவன் நடந்தான். - * -

காலடியில் கவனிப்பாரற்றுக் கிடந்த அந்தக் கிழிசல் தாளில் சொற்கள் சில காணப்பட்டன. - - .

அன்பு கடமையை மாத்திரம் எதிர்பார்ப்பது கிடையாது ; உரிமையையும் எதிர்பார்க்கும். - -

பனித்துளிகளில் வானவில் தோன்றிக் கொண்டிருந்தது. அந்தக் கடிதம் மேஜை மீது கிடந்தது. அழகி, அன்றைக்குத் தன்னக் காப்பாற்றியதற்கு நன்றி தெரி: வித்த சமயத்தில், அவளிடமிருந்து கடிதமொன்று விழுந்ததல்லவா ? அவள் அதை எடுக்க விரைந்த போதுதானே கதவு தட்டப்படும் ஓசை காதுகளைச் செவிடுபட அடித்தது ...அதற்கப்புறம்தானே எதிர்பாராத அந்தச் சம்பவம்கூட நடந்தது? . சம்பவங்கள் இல்லையென்ால் வாழ்க்கைப் புத்தகத்தில் ரசனை சேர்க்கப்பட முடியாது. --

ஆங்கள் மனம் கேட்கவில்லை போலிருக்கிறதே? வேண்டு மால்ை இன்னுமொரு தடவை படியுங்களேன். என்ற பாவனை யில் அந்தக் கடிதம் திரும்பவும் துடிதுடித்தது, தன் மீதிருந்த கண்ணு டிக் கல்லையும் மீறி எகிறிக் கொண்டு. • * . “அன்பு:கனிந்த தோழி அழகிக்கு

{ உன்னுடைய அழைப்பு கிடைக்கப் பெற்றேன். சந் Tab. சென்ற வாரம் என்ன்ேச் சந்திக்க நீ தஞ்ச்ைக்கு என் விட்டுக்கு வந்தபொழுது, உன் கலியான விஷயமர்க் நீ ஒன்றுமே