பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லதோர் வீணை செய்து... ! 23

பிரஸ்தாபிக்க வில்லையே ... உன்னுடைய எதிர்காலக் கணவர் * எப்படி எப்படி இருக்கவேண்டும். எப்படி எப்படி இருப்பார்’ என்றெல்லாம். ஏதேதோ பிரழாதமாகச் சொல்வாயே ? ஆமாம் ; யார் இந்த அழகேசன் ? உன் இஷ்டப்படிதான் கல்யாணம் நடை பெறுகிறதா ? அழகேசன் சென்னையிலுள்ள பெரிய பணக்காரப் புள்ளி என்ற அளவில் என் தகப்பஞர் தகவல் சொன்னர். சென்னையில் மயிலாப்பூரிலிருக்கும் என் சகோதரியிடமிருந்து வந்த கடிதம், அழகேசன் ப்யங்கரமான ஆள் என்ற ரகசியத்தைத் தெரி வித்தது. என் கடிதம் உனக்கு நன்மை எதுவும் செய்யாவிட்டாலும், வரவிருக்கும் கெடுதல்களிலிருந்தாவது உன்னைத் தற்காத்துக் கொள்ள வழி சொல்லும் என்ற நினைப்பில்தான் இதை அவசரம் அவசரமாக எழுதுகிறேன். - -

செங்தாமரை.”

அக்கா...’ என்று அழைப்பைத் தூதுவிட்டுக் கொண்டே கூடத்துக்குள் நடந்தான் கரிகாலன். கையிலிருந்த காலித் தட்டைத் தரையில் வைத்துவிட்டு நிமிர்ந்தான். சுவரோடு சுவராகப் பொருத்தி வைக்கப்பட்டிருந்த அலமாரியில் அந்தப் பேணு, அந்த டம்பப்பை, அந்த ரோஜாப்பூ காணப்பட்டன. இம்மூன்று பொருள் களும் அவனை முன்னூறு முறை குடைராட்டினம் சுற்றிவிட்டன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கதை ஒளிந்துகொண்டு சாக ஸ்ம் செய்வதாகப் பட்டது அவனுக்கு. அவன், திருமணத் தம்பதி களுக்குப் பரிசாகக் கொடுத்த புத்தகத்தில் எழுதிய வரிகளைப் படித் தான். முள் ரோஜாவில்-ரோஜா முள்ளில் முள் என்ற அந்த ஒரு சொல்லைமட்டும் நீக்கும் சக்தி, வாழ்க்கையை அமைத்துக் காட்டுபவர்களின் கையில் அல்லவா இருக்கிறது :-அப்படியே மூடிவிட்டான். அழகியின் வாழ்க்கை விதியை ஊகித்து நிர்ணயிக் கும் தீர்க்க தரிசனம் அவன் எழுதிய வரிகளில் எப்படி ஒட்டிக் கொண்டதோ : - -

அக்கா...’ என்று மறுபடியும் அழைத்தான். சுசீலா தலையை உயர்த்தினுள். அவளுடைய கண்கள் கலங்கி யிருந்தன. வழிந்து நழுவிய முத்தொன்று அவள் விரித்திருந்த பத் திரிகையில் தஞ்சமடைந்தது. - -

தம்பி, பார்த்தாயா இதை?’ என்று சொல்லிச் செய்தித்தாளே அவனிடம் நீட்டினுள். அழகியும் அழகேசனும் தம்பதி சமேதராகப் படத்தில் காட்சியளித்துக் கொண்டிருந்தார்கள்....! : - ‘தம்பி, விதியின் விளையாட்டைப் பார்த்தாயா?’ என்று கேட் டாள் சுசீலா, * ‘ , . r ..”.