பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லடி பராசக்தி’ 29

அப்பாவுடன் தகராறு செய்யும் உங்கள் தம்பிக்கு சில மணி நேரம் மனத்தைக் கட்டுப்படுத்திவிட்டு, அவனுடைய திருமணத்தை நடத்த வேண்டுமென்று என்னிடம் யோசனை கேட்டீர். உண்மையென்று கம்பி, எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் சக்திகொண்ட அதிசய மை ஒன்றைத் தந்தேன். கடைசியில் நீர் அதை துஷ்பிரயோகம் செய் திருக்கிறீர். உமக்கு வாழ்க்கைப்பட மறுத்த அதே பெண்ணுக்கு அதைப் பயன்படுத்தி, இப்பொழுது ஒர் அபலைப் பெண்ணைக் கூண்டுக்கிளியாக்கப் பார்க்கிறீர். என்றாவது ஒருநாள் நீர் ஆண்டவ ளிைடம் பதில் சொல்லித்தான் தீரவேண்டும். அதற்கு முன் சட்டத் திற்கும் நீர் ஜவாப் கூறவேண்டிய சந்தர்ப்பம் வராமல் போகாது. ஏன், உங்கள் மனச்சாட்சியிட்ம் பாவ மன்னிப்பு கேட்காமல் தப்பவே முடியாது என்பதையும் உமக்கு எச்சரிக்கை செய்து விட்டுப் போகத்தான் நான் வந்தேன்...’ என்று பொரிந்து தள்ளி விட்டு மறைந்து சென்றார் கஜேந்திரன். -

ஈரேழு உலகம் என்று சொல்லப்படும் அந்தப் பதின்ைகு உலகங்களையும் தாண்டிப் புதியதொரு உலகிலே அழகேசன் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்

அப்பொழுது, அழகேசனின் பெயருக்கு ஜெனரல் ஆல்பத் திரியிலிருந்து தந்தியொன்று வந்தது.

‘தங்கள் மனைவி அழகிக்கு உடல்நிலை அபாயம். உடனே வரவேண்டும்.’’ - -