பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ‘’ ஒரு வரம் தா!’

பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. உலகத் தாய் விழித்துக் கொண்டாள். அன்னை செய்த தவம் பலித்து விட்டது : ஞாயிறைப் போற்றினுள். ஒன்றல்ல, ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தைச் செலுத்தியவாறு பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தான் சூரியன். -

காலைக் கதிரவனின் கதிர் முத்தம் அந்தப் பெரிய கட்டடத்தைத் தட்டி யெழுப்பியது. உயிர்க்கயிற்றிலே பாசத்தையும் பந்தத்தையும், ஆசையையும் ஆதங்கத்தையும் ஊசலாடவிட்டவாறு துடித்துக் கொண்டிருந்த உள்ளங்கள் இரவுப்பொழுதில் வடித்துக் கொட்டிய கண்ணிர் வெள்ளம் மெல்ல மெல்ல உலர ஆரம்பித்தது.

ஆம் ; அதுதான் ஜெனரல் ஆஸ்பத்திரி. மாயை என்ற சொல்லைத் திரிசங்கு சொர்க்கமாக்கி வேடிக்கை பார்க்கும் மாய: சக்தி கொண்ட அதிசய உலகம் அது. எந்தப் பட்டணம் என்ன தான் கொள்ளே போகட்டும், அதற்குத் துளி கவலை இருக்க வேண்டுமே ? ஊஹூம். அதுதான் கிடையாது!...கிடையவே கிடையாது. -

சென்னை மண்ணை ஆங்கிலேயர்கள் மறந்தாலும், சென்னை அவர்களை மறக்கமுடியாத அளவுக்கு அமைந்துவிட்ட இக்கட்டான நிலைக்கு இந்த விடுதியும் ஓர் அத்தாட்சி. அங்கே மேல் தளத்தில், கட்டில் ஒன்றில் படுத்திருந்தாள் அழகி. அப்போதுதான் டாக்டர் வந்து பார்த்து நோய்க் குறிப்பு’ப் புத்தகத்தில் என்னவோ “கிறுக்கி விட்டுச் சென்றார். அவளுடைய கண்கள் விழித்துக் கொண்டுதான் இருந்தன. ஆனல். அந்தக் கண்ணின் மணிகளிலே உறக்கம் ஊஞ்சலாடியது. அது தாலாட்டுப் பாட அழைத்தது அழகியை. அவள் அப்போது அங்கிலேயிலா இருந்தாள்... ?

இருந்திருந்தாற்போல அவளுடைய விழிகளிலே கண்ணிர்த். துளிகள் சில உறவு கொண்டாட ஓடோடி வந்தன. சற்றே விலகி ரும் பிள்ளாய்!” என்று நயமாகச் சொன்னுள்; அவை கேட்கவில்லை. பயமாகச் சொன்னுள்; அப்பொழுதும் அவை பணிய வில்லை. ஒட் டிய உள்ளத்தைத் திரைபோட்டு மறைக்கப் போர்த்தியிருந்த மார்புச் சேலையில் அவை ஊடும் பாவுமாக ஒட்டிக் கொண்டன. வாய் விட்டுச் சிரிக்க எத்தனம் செய்தாள். கடைசியில் வாய்விட்டு அழுதுவிட் *.,