பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லவர்கள் வாழ்வதில்லை! 45

தடையிருக்காதல்லவா ? என்னவோ சொல்ல வந்தேன்; ஏதோ சொல்கிறேன். ஆம் ; அழகியைப் போலவே எனக்கும் கூட வாழ்க்கை அலுத்துத்தான் போய்விட்டது. இந்த லட்சணத்தில், அலுத்துப்போன உள்ளங்களுக்கு அன்பு மழை பொழிவது என் பணி. வேடிக்கையான பிழைப்புத்தான் !

  • விதி, கடவுள் என்றால் தொண்டை வறளும் பரியந்தம் எதிர் வாதம் செய்யும் அவள், ஹாஸ்டலில் எனக்கு எழுதி வைத்துச் சென்ற கடிதத்தில் விதி சிரிப்பதாகக் குறிப்பிட்டிருந்தாள். என்னை விரைவிலேயே சந்திப்பதாகவும் உத்தரவாதம் கொடுத்திருந்தாள். அக்கா ஆனந்தம் சுரக்கும் நெஞ்சோடு, அன்பு பெருக்கெடுக்கும் இதயத்தோடு, பாசம் புரளும் உள்ளத்தோடு அழகியை வரவேற்க நான் இரண்டு கைகளையும் நீட்டிக் காத்திருக்கிறேன். அவளேக் கண்டுவிட்டால், எனக்குக் கோடிப் பொன் கொட்டிக் கொடுத்த சக் தோஷம் உண்டாகும். மிஸ்டர் அழகேசனையும் விரைவில் சக்தித்துப் பேசுவதாக யிருக்கிறேன், அழகியின் இருப்பிடம் கூடத் தெரிய வில்லை. உங்களுக்குத் தெரியுமா, அக்க்ா ? ஏதாவது லெட்டர் வந்ததா ?...

‘.ம்... ஒற்றைத் தனி உயிராக வாழமுடியாது-இந்த உல கத்திலே , வாழவும் அனுமதிக்காது-இந்த உலகம் ! உயிர் போகிற தென்றால்கூட கையளவு தண்ணிர் கொடுக்க மாட்டார்கள் ! பாசம் காட்டலாகாதா என்றால், அது காசு எத்தனை என்பார்கள் ! இப்படிப்பட்ட விசித்திரமான் லோகத்திலே முன்பின் தெரியாத ஒரு அழகியை முன்னும் பின்னும் அறிந்துகொண்டு, அவள் பேரில் தம் உயிரையே வைத்திருக்கின்ற ஜீவன்கள் நீங்கள், உங்கள் தம்பி, பரிமேலழகர், நான் ! நாம் நம்பிக்கையின் முனையில் நின்று அவளை அண்டி அண்டிச் செல்கிருேம் : அவளோ விரக்தியின் விளிம்பில் காலூன்றி நம்மை விட்டுப் பிரிந்து பிரிந்து செல்கிருள். இந்த நம்பிக் கையும் விரக்தியும் கைகுலுக்கிக் கொண்டு, அழகியை நம் முன் கொண்டு வந்தால் எவ்வளவோ கன்றாக யிருக்கும். 1’ என்று சொல்லி நிறுத்தினுள் நர்ஸ் செந்தாமரை.

முதற் பிறை முத்துப் பல்லொளி சிந்திச் சிரித்துக் கொண் டிருந்தது-படப்பிடிப்பின்போது சிரிக்க வேண்டுமென்பதற்காக வீட்டிலே சிரிக்கப் பழகிக் கொள்ளும் நட்சத்திரம் மாதிரி.

இன்னிக்குக் காலையிலே இந்த லெட்டர் வந்திச்சு ; அழகி எழுதி யிருக்குது,” என்ற முன்னறிவிப்புடன் கடிதத்தைக் கொடுத் தாள் சுசீலா. . . . . . . . . . . .

செந்தாமரைக்குப் படபடப்பு அதிகமாகி விட்டது. உன்னிப்

புடன் படிக்கலாஞள். -