பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஜாதி ரோஜா

அன்புள்ள சுலோ அக்கா அவர்களுக்கு,

வணக்கம், - இந்தக் கடிதம் உங்களுக்கு அத்து மீறிய ஆதிசய உணர்ச்சி யைப் பாய்ச்சும் என்பதில் சந்தேகமில்லை. அழகியைப் புதுமைப் பெண்ணுக மட்டுமே நீங்களும் உங்கள் தம்பியும் இதுவரை நினைத் திருப்பீர்கள். தற்போது புரட்சிப்_பெண்ணுகவும் அழகி ஆகிவிட் டாள். காதலுக்கு மறுபெயர் புரட்சி என்று எங்கோ படித்தது நினை விற்கு வருகிறது. என்வுரைக்கும் காதல் இல்லை ; ஆணுல் புரட்சி விளைந்திருக்கிறது. முள்வேலி கட்டி ரோஜாவை மல்ரிச் செய்து வேடிக்கைப் பார்க்கிறது உலகம். நான் உலகத்தின் பாதத்தில் நிற்க விரும்பவில்லை; உச்சியில் நின்றேன்; சுழலும் உலகைத் திரும் பிப் பார்த்தேன். சுழலும் முட்களைத்தான் என்னுல் காண முடிந்தது. முள் வேலியைக் காலால் எட்டி உதைத்து விட்டுத் தனி ரோஜா வாக-ஒற்றை ரோஜாவாக என்னல் நிற்க முடியும்-என் நெஞ்சில் தவழும் நேர்மையை மறக்காமல்-என் உள்ளத்தில் ஒளி உமிழும் தாலியை மறக்காமல் ஆளுல் என் மனச்சாட்சிக்குப் புரட்சி மனப் பான்மையில்தான் ஈடுபாடு அதிகம். மை யிஞல் என்னை மயங், கச் செய்த-ரோஜாவில் மயக்க மருந்தைத் தடவி நினைவிழக்கச் செய்த அவரைப் பழிக்குப் பழி வாங்கப் போகிறேன் ; நல்ல. வர்கள் ஏன் வாழ முடியாது என்பதை நாலு பேருக்கு எடுத்துக் காட்டப் போகிறேன். என் கட்சிக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. நியாய மன்றத்திலே அவர் பேரில் வழக்குத் தொடுக்கப் போகி றேன். கல்லானுலும் கணவன் என்கிறார்கள் ; கல்லைக் கடவு ளாகக் கருதுபவர்கள் இருக்கையில், அதைக் கணவனுகவும் கருத முயல்வதில் எனக்கு ஆட்சேபணம் எதுவுமே இல்லைதான்; ஆளுல் அந்தக் கல்லிலே கடுகத்தனை கருணை ஒட்டியிருக்க வேண்டாமா? கல்லாம்-கடவுளாம் ; புல்லாம்-புருஷனும் ! - -

நாஸ்திகம் பேசுகிறேனே என்று நீங்கள் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள். அது எனக்கு கொஞ்சமும் உடன்பாடு. அல்ல! ஆலுைம், என் வார்த்தைகளைத் தனித்திருந்து ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகச் சிந்தித்துப் பாருங்கள். வாழ் வின் ஆனந்திமிதப்பிலே உல்லாச நீச்சல் போட்டு விளையாட் வேண்டிய நான், துன்பச் சுழியில் சிக்கித் திக்குமுக்காடுகிறேன். கான் பட்ட வேதனையை-அனுபவிக்கும் அல்லலை ஆண்டவன் அறியவில்லே என்று எப்படிக் கருதமுடியும் ? படைத்தவன் படைப் புப் பொருள்முன் தோன்றவேண்டாம்; என் பேரிலே பச்சாதாப மாவது காட்ட வேண்டாமா ? “ . . . . . : i

விசித்திரமாகத் தோற்றம் தருகிறேனு நான் ? விந்தைப் பெண்: ணுக உங்களுக்குக் காட்சியளிக்கிறேன ? சூழ்நிலைகள் என்ன