பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கண்ணிரின் இதயம்

‘அழகியைப் பார்த்துவர முதலில் தஞ்சாவூருக்குப் போய் வரு வோமா? அல்லது, அழகேசனைக் கண்டு ப்ேசி அவரது மன நிலையை ஊகித்தறிந்த பிற்பாடு, அழகியைச் சந்திக்கலாமா ?” என்ற போராட்டத்தில் நர்ஸ் செந்தாமரை உழன்று கொண்டிருக் கையில், அன்றையச் செய்தித் தாள் அவள் மேஜைக்கு வந்தது. முதல் பக்கம் தந்த முக்கியச் செய்திகளைப் படித்த அவள் கடைசிப் பக்கத்திற்கு வந்தாள்.

கால மணல் வெளியில் அடிச்சுவடுகளைப் பதித்தவுடன், விடிை, நிமிஷம், மணியெல்லாம் விடை பெற்றவாறிருந்தன.

ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் புறப்பட வேண்டுமென்ற ஞாபகம் வந்தது. நிலைக்கண்ணுடி அவளது கர்ஸ் வேஷ ‘த்திற்குச் சரி ’ சொன்னது. சாவின் சந்நிதியில் உயிருக்கு மன்றாடிக் கொண் டிருந்த உயிர்க் கணவனின் பாதத்தடியில் அமர்ந்து கண்ணிரைத் தன் மாங்கல்யத்திற்குக் காணிக்கை வைத்துக்கொண்டிருந்த ஓர் அபலைப் பெண்ணின் உருவம் அவள் மனக்கண்ணில் தெரிந்தது. அதே சடுதியில், அவளது மனக்கூடத்திலே அழையாத விட்டில் நுழைந்த விருந்தாளியாக அழகியும் பிரவேசித்தாள். பெண் பிறவி கள் இருவரையும் மனத்தராசில் ஏற்றி எடை போடப்போன தரு ணம், அவளுடைய மண்டை வெடித்துவிடும் அளவுக்கு அப்படிக் கனத்தது. - - . * -

ஆஸ்பத்திரியில் அவள் நுழைவதற்குப் பதிலாக அவளுடைய கையொப்பமிட்ட லீவ் லெட்டர் நுழைந்தது. மருத்துவ மனேயில் அவளுடைய இன்முகத்திற்காக ஏங்கிக்கிடந்த நூற்றுக்கணக்கான ஜீவன்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருந்த அவளது நெஞ்சின் அடி வாரத்திலே, உலகத்தின் ஏதோ ஒரு முடுக்கிலே உயிர் வாழ்ந்து கொண்டிருந்த அந்த அபலே அழகி ஒருத்திமட்டும் அத்தனை பேர் களுடைய இடங்களையும் வட்டியும் முதலுமாகக் கவர்ந்து பற்றிக் கொண்டிருந்தாள்.

அன்பு விசித்திரமான நோய் , அந்த நோய்க்குப் பெயர்வைக்க எந்த டாக்டராலுமே முடியாது. இப்படிப்பட்ட விசித்திர நோய்க்கு மருத்துவப் பணிப்பெண் செந்தாமரை மாத்திரம் எப்படித் தப்ப முடியும்?