பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஜாதி ரோஜா

அழகி அவளை அழைக்கவில்லே ஆளுல் அவள் அழகியைக் கூப்பிட்டாள். வெள்ளை அங்கிகள் பீரோவில் அடைக்கலம் புகுந் தன.

செந்தாமரை, நாலுநாள் முந்தி உனக்கு ஒரு லெட்டர் வந்: திருக்கிறது. அதை கடைசி ரூமில் போஸ்ட்மேன் போட்டுச் சென்று விட்டானும், ஸ்டெல்லா சொன்னுள்,’ என்ற விளக்கத் துடன் செந்தாமரையிடம் அக் கடிதத்தைத் தந்தாள் அவளுடைய, தோழி. - . .

நட்சத்திரங்களை எழுத்துக்களாக வடித்ததுபோல அவ்வளவு அந்தமாக விலாசம் எழுதப்பட்டிருந்தது. ஆமாம், இது என். அழகியின் கையெழுத்தேதான். சுசீலாவுக்கு லெட்டர் போட்டவள் எனக்குப் போடவில்லேயே என்று குறைப்பட்டுக் கொண்டிருந்தது எவ்வளவு பெரிய தப்பு?’ என்று எண்ணிப் பாவ மன்னிப்பு ‘ பெற்றுக்கொண்டு உறையைக் கிழித்தாள் தாமரை. *

அழகியின் கடிதத்திற்கு மட்டும் அற்புதமாகப் பேசத் தெரியும் . ‘அன்புமிக்க தோழி செந்தாமரை, * -

விடியாத இரவை வாழ்த்திக்கொண்டே துயர் வற்றாத உள். ளத்திலிருந்து எழும் பெருமூச்சுக்களைச் சொற்களாக மாற்றி இக் கடிதத்தை உனக்கு எழுதுகிறேன். ஒடும் ரயில் உறங்கும் உல. கம் ; விழித்திருக்கும் பேதை நெஞ்சம்-இப்படிப்பட்ட சூழலுக் கிடையில் காலத்தையும் தூரத்தையும் பொய்க் கணக்காக்கி விட்டு, உன்ளுேடு நான் நெஞ்சோடு நெஞ்சம் கலந்து பேசப் போகிறேன்.

என்னுடைய தபால் உன் பார்வைக்கு வந்திருக்கும். விரை விலேயே உன்னைச் சந்திப்பேன்; அப்போது அழகியிடமிருந்து புதிய பல திடுக்கிடும் விஷயங்களை அறிந்து கொள்வாய் ! என்ற அபாய அறிவிப்பை கீ மறந்திருக்க முடியாது. நேரில் சொல்ல வேண்டிய சில விஷயங்களைக் கடிதத்தில் குறிப்பிட எண்ணு இறேன். இரண்டொரு நாளில் நான் சென்னைக்கு வருவேன். அப். பொழுது என் நிலை, போக்கு, முடிவு எப்படியாகுமோ ?-அது என் வரைக்கும்கூட ரகசியந்தான்... -

செந்தாமரை : அன்றைக்கு உன்னிடம் சொல்லாமல் கொள் ளாமல் புறப்பட்டேன் அல்லவா ? விதி இழுத்த இழுப்பிலே நான் போக மறுத்தேன் ; ஆனல் என் கால்கள் அன்றுத்த திசைக்கு மறுகி மறுகிப் போன்ேன். அப்பொழுது ஒரு மனிதர் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். காமிரர் தோளில் இழைந்தது; கையில் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் இருந்தது. டிக் ‘காக உடுத்து. இருந்தார். - -