பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ஜாதி ரோஜா

இறந்த காலப் பெயரான பின்னர்தான், அமர ஒளியைக் கான முடியுமா ?

கஜேந்திரனேச் சந்திக்க வேண்டும் ; அழகேசனப் பற்றிய பெரிய ரக்சியங்கள் சிலவற்றைச் சொல்லப் போகிருராம். நான் உன்னைச் சந்திக்காமல் இருப்பேன ?

திருச்சி வந்து விட்டது. ஐயோ, என் அத்தான் முரளி என்னைக் கண்டுவிடப் போகிருரே ? அவர் இங்கே எப்படி வந்தார் ?

அழகி.”

செந்தாமரை கடிதத்தை டிராயரில் வைத்தாள். ஆமாம், சுசீலாவுக்கு எழுதுவதற்கு முன் அவள் இதை எனக்கு எழுதி .யிருக்கிருள். சுசீலாவை எனக்குத் தெரியுமென்பதை அவள் எப் படி அறிவாள் ? ம்... ! என்று பெருமூச்சு விட்டாள்.

செந்தாமரை வழி மிதித்து, வழி திரும்பி நடந்தாள்.

  • அழகேசன் விலாசம் வந்தது. உலகறிந்த கபாலீஸ்வரர் உச்சிக்காலப் பூஜைக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டதை உலகிற்கு அறிவிக்கும் பொறுப்பு கண்டா மணியின் தலையில் விழுங் திருக்க வேண்டும் f . .

பொட்டுப் பொழுது கின்றாள் ; நிதானிக்க முடியவில்லை அவளால். நாய்கள் ஜாக்கிரதை என்ற எச்சரிக்கைப் பலகைக் கருகில், நாய் எதுவும் இல்லை ; நல்ல வேளை, கூர்க்கா கின்றான். காய் என்றால் அவளுக்கு ஓர் ஈடுபாடு ; நன்றி மறக்காத ஜந்து ஆயிற்றே !-அதற்காகத்தான் ! கூர்க்காவைக் கண்டதும், பூ என்றாள் அலட்சியமாக, ஆ!’ என்று அவன் அவளுக்குப் புரி யாத ஹிந்தியில் என்னவோ சொன்னன். அவனுக்குப் புரியாத தமிழில் அவள் போ!’ என்று கூறிக்கொண்டே விடுவிடு ‘ வென்று உள்ளேயே போய்விட்டாள். .

கூடத்தைச் சுற்றுமுற்றும் பார்வையிட்டாள். அரசியல் முத் திரை பெற்ற பிரமுகர்கள் சிலர் காட்சியளித்தார்கள். புராண முத் திரை பெற்ற சில மனிதர்கள் புன்னகை புரிந்தார்கள்.

வேலைக்காரி ஒருத்தி வந்தாள். அவளைத் தாஜா பண்ணி ளுள் செந்தாமரை. அசோக சக்கரம் ஒன்று சிரித்தது. வேலைக்காரி விட்டுக்காரியானுள். அவள் சொன்னுள் : : அச்சாணி இல்லாத தேர் முச்சாண்கூட ஓடாதின்னு எங்க பாட்டி சொல்லுவாங்க. அதைப் போல, இந்த விட்டிலே ஒரு பெண் தெய்வம் இல்லாத தாலே, இத்தனை பெரிய வீடு பாழிடைஞ்ச கோயிலாட்ட்ம்தான்