பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிரின் இதயம் 53.

கண்ணுக்குத் தோணுது. அழகி அம்மாவை அன்னிக்குக் கண்ணு. லத்திலே பார்த்தது; இப்போ எனக்குக் கண்ணுக்குள்ளேயே நிக் குது. இங்கே சின்ன எசமானர் அழகேச ஐயா கல்யாணம் கட்டி யும் பிரம்மச்சாரியாகயிருக்காரு. என்ன காரணம்ோ, அழகி: அம்மா உலகமே வெறுத்துப்போய் எங்கேயோ அஞ்ஞாதவாசம் செய்யருங்க. கொஞ்ச நாளைக்கு முந்தி அழகி அம்மாளுக்கு. ரொம்ப உடம்புக்கு முடியலைன்னு தந்தி வந்திச்சாம் ; மூணு நாள் யோசிச்சுப்பிட்டு நாலாம் நாள் போய் விசாரிச்சாங்க ; அழகியை ஆஸ்பத்திரியிலேயிருந்து அனுப்பிவிட்டதாகத் தகவல் கிடைச்ச தும், வீட்டுக்கு வந்து மலங்க மலங்கக் கண்ணிர் வடிச்சாங்க, சின்ன ஐயா. அன்னிக்கு ராத்திரியே அவருக்கு மயக்கம் வக் திடுச்சு ; சேந்தாப்போல ரெண்டு நாழிப் பொழுதுக்கு அவருக்குப் பேச்சு மூச்சு இருக்கலை. -

டாக்டர் நாலு பேர் வந்தாங்க : தெரிஞ்சவங்க வந்து பார்த் தாங்க. கடைசியா, இவருக்கு யாரோ பில்லி சூன்யம் வச்சிருக்க, வேணும்னு முடிவு செஞ்சிருக்காங்க. அதை எடுக்கறதுக்கு மலை யாளத்தான் ஒருத்தனுக்கும் ஆள் போயிருக்குது. இத்தனை தீவினை யும் போதாதின்னு, கேத்திக்கு முதல் நாள் ஐயர் ஜவுளிக் கடை யிலோ யாரோ புகுந்து ரொம்பப் பணத்தைக் கொள்ளையடிச்சிட்டுப் போயிருக்காங்க. எனக்கு என்னமோ ரெண்டு பொழுதா ஒரு சம் சயம் மனசிலே உறுத்திக்கிட்டே யிருக்குதுங்க அம்மா. ஏழை, பாழைங்க அழுத கண்ணிர் யாரையும் சும்மா விடாதின்னு பேச்சுக். குச் சொல்லறது நெசந்தான் போலே ! ஒரு வேளை, க்ண்ணுலத். தன்னிக்கு மணவறையிலே அழகி அம்மா மூணும் பேருக்குத் தெரியாமல் வடிச்ச கண்ணிர்தான் இப்படி இவரை ஆட்டிப் படைச்சுத் திருவிளையாட்டுப் பண்ணுதோ, என்னமோ ? எங்க. அழகேச எசமானர் மாத்திரமில்லை-உங்க அழகி அம்மாகூட ஒரு விடுகதை கணக்கிலேதான் இருந்து வர்ருங்க ‘

மாயக் குயவன் மண் பிசைந்து ஏழை என்ற அச்சை எழுதி முடித்ததும் உயிர்ப்பிச்சை அளிப்பதற்கு முன், மறந்துபோய். விடாமல் வைத்தது ஒன்றே ஒன்றுதான்-அதுதான் இந்தப் பாழாய்ப் போன இதயம். வேலைக்காரி வடித்த கண்ணின் இதயம் விம்மி விம்மி வெடித்தது. . . . . . . .

செந்தாமரைக்கு மயிர்க் கூச்செறிவு ஏற்பட்டது. சூன்யத்தைத். துண்டு போட அண்டிச் சாடின கண்கள். பட்டமளிப்பு விழா உடையில் காட்சியளித்த அழகேசனின் போட்டோ அவளது இமை வட்டங்களை விரியச் செய்தது. பைத்தியம் பிடித்தவளைப் போல வெளியே வந்தாள். பளிங்குக் கற்கள் அவளுக்குப் பாத பூஜை

பண்ணின.