பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. “நாளை, - நிலவு

அந்த இன்ப ஸ்பரிசம் அழகியின் உள்ளத்தோடு உள்ளமாகப பரவி நின்றது; உணர்ச்சியோடு உணர்ச்சியாக ஊடுருவி நின்றது, தன்னுள் எழுந்த இந்தப் புதிய உணர்வு அவளுக்குப் புதிய அனு. பவம். புதிய உலகம் ஒன்றில் காலெடுத்து வைத்திருப்பது போலவே அவளுடைய மனம் அவளுக்குச் சொன்னது. அவள் கம்பிளுள் ; சரி!’ என்று அவள் ஆதரித்த சமயம், இல்லை . என்று மறுமொழி கூறியது அவளுடைய மனச்சாட்சி.”

துல்லிய வெண்மை நிறப் புடவை அவள் கண்களில் பட்டுத் தெறித்தது , அவள் நடுங்கிப் போய் விட்டாள். சேலையில் பட்டுத் தெறித்தன. ரத்தத் துளிகள். அவள் துடி துடித்து விட்டாள். அழகி அந்த லஸ் முனையிலேயே நின்றுகொண்டிருந்தாள். அவளது சுய நின்ைவு அழகேசன் விலாச’த்தில் போய் நின்றது. களவுபோன நினைவுகள் களம் புகுந்தன.

அழகேசனச் சந்தித்த சம்பவத்தை அழகி எண்ணிப் பார்த் தாள். அப்போதும் அவளுக்கு அது கனவு நிகழ்ச்சிபோலத்தான் பட்டது; இப்போதும் அவளுக்கு அது கனவு நிகழ்ச்சி மாதிரியே. தான் தோன்றியது.

அந்தச்

அழகி அன்று காலையில் எழும்பூரில் ரயிலிலிருந்து இறங்கி வெளியேறினுள். அதே சமயம் அவளுடைய அத்தான் முரளி யைச் சந்தித்தாள் ; அல்ல, அவன் அவளைச் சந்தித்தான். --

  • கடிதங்கள் மூலம் தூதுவிட்ட கூக்குரல் பலன் சொல்ல. வில்லை; ஒடோடி வந்தேன். ஆண்டவன் புண்ணியத்தில் உன்னைச் சந்தித்க முடிந்தது, அழகி ‘ என்றான் அவன்.

அவள் விரக்தியுடன் சிரித்தாள். -

எழும்பூரில் அறை யொன்று வாடகைக்கு எடுத்துத் தங்கி விடலாம்,’ என்றான் முரளி. -


இல்லை. எனக்கு ஏகப்பட்ட வேலே இருக்கிறது. அத்தான் : திருவல்லிக்கேணியில் என் தோழி பூங்குழலி இருக்கிருள் ; கோமதி இருக்கிருள் ; அல்லி இருக்கிருள். அங்கேயே ாேய்க் குளித்துவிட்டு நான் உடனடியாகப் புறப்ப்ட வேண்டும்.

இரண்டெட்டில் அவள் அவனை விட்டுப் பிரிந்தாள்.