பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'காளை, புது p. 57

பொழுது வளர்ந்தது. அழகி தன் தோழியின் வீடு சென்று திரும்பினள், புதுமெருகுடன், திருவல்லிக்கேணி பஸ் அவளே மவுண்ட்ரோடு முனையில் கொண்டு சேர்த்தது. இறங்கிளுள், கொஞ்ச தூரம் நடந்தாள். ரவுண்டாணு ‘ வந்தது. திரும்பும் போது, அவள் தன் அத்தான் முரளியைப் பார்த்து விட்டாள். மறுக எண்ணியது கெஞ்சம் ; ஆனால், கால்கள் மறுக மறுத்துவிட்டன. முரளி, அழகி, அழகி ‘ என்று கூப்பிட்டுக்கொண்டே எதிர்ச் சாரியிலிருந்து வந்தான். இருவரும் சந்திக்கும் சமயத்தில் பிளஷர் கார் ஒன்று அசுர வேகத்தோடு காரினும் கடிது பறந்து வந்தது. சந்தித்த இருவரையும் பிரித்துவிட நினைத்தது போலும் பாவம், விதி என்ற ஒன்று அவர்களே என்றாே பிரித்துவிட்டதை அந்தக் கார் எப்படி அறிய முடியும் ? -

மயிரிழை தப்பினுள் ; அழகியின் உயிர் தப்பியது. அதே கணம், அழகி, அழகி ‘ என்ற கூப்பாடு விண்ணைச் சாடி எதிரொலித்தது. திரும்பக்கூட நாழியில்லை. அழகேசன்-அழகி யின் உரிமைக்காரன் தட்டுத் தடுமாறியவாறு குறுக்கே நடந்து வந்தான். அழகி தன்னுணர்வைத் தன்வசப் படுத்திக் கொள்வதற். குள், அழகேசன் நடுத்தெருவில் மயங்கிக் கிடந்தான் ; அருகே நின்ற பிளஷர் அவனை வஞ்சம் தீர்த்துக் கொள்ள எண்ணித் தோல்வியுடன் கின்றுகொண்டிருந்தது. அழகேசனுக்குப் பிரக்ஞை வரவில்லை ; ஆனால், அவனது நெற்றி மேட்டிலிருந்து குருதி வெள்ளம் மட்டும் புதுப்புனலாகப் பாய்ந்தது ; ரத்தத் துளிகள் க்யூ முறையை அனுஷ்டித்தன. தெரியாதவர்கள் ஓடோடி வங் தார்கள். ஆனால், தெரிந்தவளோ ஜவுளிக்கடை முகப்பிலுள்ள அழகுப் பொம்மையாக கின்றாள். ரத்த நாளங்கள் வெடித்து, அவற்றிலுள்ள ரத்தம் முழுவதும் மண்டை உச்சிக்கு ஏறிவிட்ட மாதிரி உணர்ந்தாள். மவுண்ட் ரோடின் பொதுத் தோற்றம் அவள் முன் ஆலவட்டம் சுற்றியது. தன்னைத் தானே ஒரு கணம் பார்த்துக் கொண்டாள். வெள்ளைப் புடவை, கறுப்பு ரவிக்கை-மறைவி லிருந்து தன் உயிரை யாரோ பறித்துக்கொண்ட மாதிரி அஞ்சினுள் ; அயர்ந்தாள் ; அலறிஞள். கழுத்தில் தொங்கிய அந்தத் தாலி ஊச லாடிக் கொண்டிருந்தது. கண்கள் வடித்த கண்ணிர்த் துளிகள். அதற்கு கிவேதனம் ! - .

ஏம்மா, நீ.பொம்பளை தான ? ஒனக்கு நெஞ்சே கிடை காதா?. பாவம், பாரோ பெரிய இட்த்துப் புள்ளை கணக்கிலே தோணுது. கல்லாட்டம் சும்மா நிக்கிறீயே? எங்காலும் போப் கொஞ்சம் தண்ணி கொண்டாரப்புடாது?. நீயும் கண் ~ கட்டின் பொண்ணுத்தானே தோணுது ?...’ என்றான் இ.

4 - -