பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஜாதி ரோஜா

- - * அம்மா, கண்ணில்லாத கவோதி அம்மா ... காலணு, அரைபணு குடுங்க, தாயி ‘ என்றான் ஒரு பிச்சைக்காரன்.

அழகி அவனைப் பார்த்துச் சிரித்தாள். கபோதி என்கிருன்; ஆளுல் என்னே எப்படி அம்மா’ என்று அழைத்தான் ? ஒரு வேளை எனக்குக் கதைக்கு ப்ளாட் தரத்தான் இப்போது இப். படிக் காட்சி அளித்தானே ?. உலகம் வரவரக் கெட்டுப்போய் விட்டது!’ என்று கெஞ்சில் நெளிந்த இவ்வரிகள், அவளுடைய இரண்டளு நாணயத்தை அவனுடைய நாணயமிழந்த தன்மைக்குப் பரிசு கொடுத்தன.

அடுத்த , அந்தக் கிழவன் கண்களைத் திறந்து அழகியை வணங்கின்ை. நீங்க ரொம்ப கல்லவங்களாகத் தோணுது . இது என் பெரளைப்புங்க ; இல்லாப்போன காலணுக் காசுகூட யாரும் தரமாட்டேங்கிருங்க. பொய்தாம்மா என்ன்ை இத்தனை காலமா வாழ வச்சிக்கிட்டு வருது... !’

அவன் சொன்ன உண்மையைக் கேட்டு அவள் திகைத்தாள். அந்தக் கிழவனின் உருவிலே அவள் இரண்டு உருவங் களைத் தரிசித்தாள் ; ஒன்று, அவளைப் பெற்ற தந்தை மற். ருென்று, அவளே மருமகனாக ஆக்கிக் கொண்ட மாமனர். கண்ணே அழகி ! நீ என்னமோ எனக்கு நெருப்பு போலத்தான் தோணுகிறாய் ; கெட்டதை நெருங்க விடாமல் காத்துக் கொள் கிறதுக்கும், கெட்டதைச் சுட்டுப் பொசுக்கிறதுக்கும் மாத்திரம்தான் நெருப்பு பிரயோசனப்பட வேணும், அம்மா மற்றபடி, உன் Qg . மாதிரிதானம்மா இருக்கவேணும் !’ என்று. அடிக்கடி எச்சரித்து ஆவளுடைய தகப்பனரின் வார்த்தைகள் அவள் கெஞ்சில் எதிரொலித்தன. என் மகன் அழகேசன் இனி மேல் பிழைத்துவிடுவான். டாக்டர்கூடத் தேவையில்லை. க்ண் கண்ட இந்தத் தெய்வத்தின் துணை ஒன்றே போதும் !” என்று வெறியுடன் பேசிய தன் மாமனுர்க் கிழவரின் ப்ேச்சில் ஊடாடி பிருந்த நம்பிக்கை அவள் கண்களில் நிழலாடியது. ஆனால்...?

தூரத்தில் நிற்கப்போன டாக்ஸி ’யைக் ை gra அழகி. -

அம்மா, நீங்க எங்கே போகனும்?” நிமிர்ந்து பர்த்தாள் அழகி. டாக்ஸிகின்றது; டாக்ஸி டிரைவர் நின்றன். * எங்கே போவது?-அவள் குழம்பிளுள்

கதட்டி அழைத்