பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஆறு புகைப்படங்கள் போட்ட @5 த!.

மருத்துவப் பணிப் பெண்கள் விடுதியின் முகப்பில் காட்சி யளித்த கடிகாரம் பெருமூச்செறிந்தது. அதன் பார்வை, தரையில் ஒதுங்கிக் கிடந்த அந்தப் புகைப்படங்கள்மீது பின்னி யிருந்தது.

டாக்டர் ஸார், அழகி மயங்கி விழுந்து இருபது நிமிஷங் களுக்கு மேல் ஆகப் போகிறதே ?... ஏற்கனவே இவளுக்கு வந்த மயக்க நோய் மறுபடியும் திரும்பாமல் இருக்கவேண்டும் ; கவனித் துப் பாருங்கள்,’ என்றாள் நர்ஸ் செந்தாமரை.
  • புதிதாகத் தருவிக்கப்பட்டிருக்கிற ஜெர்மன் இஞ்செக்ஷனைத் தான் அழகியின் உடலிலே செலுத்தியிருக்கிறேன். நீங்கள் பயப் படாதீர்கள், தாமரை,’ என்றார் டாக்டர்.

மருத்துவ நிபுணரையும் மருத்துவப் பணிப் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தான் கரிகாலன். பிறகு, அழகியைப் பார்த்தான். நலங்கெடப் புழுதியில் வீசப்பட்ட நல்லதொரு வீணை போலக் கிடக் தாள் அவள். இன்பப் பண்ணைப் புதைத்து வைத்திருந்த வீணைக் கம்பிகள் மாதிரி அவளது இமைப் புருவங்கள் சலனமிழந்திருந்தன.

அழகு உறங்கிக் கொண்டிருந்தது ; அன்பு உறங்கிக்கொண் டிருந்தது ; அழகி மட்டும் உறங்கிக் கொண்டிருக்க வில்லை ;. நினைவு களவாடப்பட்டுக் கிடந்தாள். . . .

  • செந்தாமரை, எனக்கு ஒரு யோசனை தோன்றுகின்றது. அழகியை மறுபடியும் ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு இட்டுச் செல்வது அவ்வளவு சிலாக்கியமாக இருக்காது , இங்கே வைத்துப் பார்க்க வும் உங்கள் விடுதி விதிகள் அனுமதி தராது. ஆகவே, அழகியை

எங்கள் விட்டுக்கே அழைத்துச் சென்றுவிட்டால் என்ன? நம்

டாக்டர் ஐயாவும்கூட மண்ணடிப் பகுதியில்தான் இருக்கிறார்கள்ாம்; உங்களுக்கும் அது ஒன்றும் அவ்வளவு தூர்மென்று சொல்வதற். கில்லை.....புதிய சூழ்நிலை, இடமாற்றம் முதலியன தத்துவரீதிப்படி பார்த்தால்கூட நல்ல பலன் தருமென்றுதான் நான் நினைக் கிறேன்... ‘ என்றான் கரிகாலன். நிதானம் இழை பின்னிய அவ னுடைய குரலில் அன்பு முறுக்கேறி நின்றது.

அடுத்த நூற்றெண்பது வினுடிகளில், அழகியின் நலன் குறித்து நான்கைந்து உள்ளங்கள் மந்திராலோசனை செய்தன.

டாக்ளி வந்தது; கரிகாலனுடைய தமக்கையின் இல்லம் வந்தது. . . . “ - - - - - -

“ அக்கா, அழகிக்கு உங்களால்தான் இனி விமோசனழு விடிவும் கிடைக்கவேண்டும். அத்தான் வந்த்தும் சொல்லுங்