பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு புகைப்படங்கள் போட்ட ஒரு விடுகதை 69

தினர் மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பக். கத்தில் அழகேசன் சிரித்த முகத்தோடு நிற்கிருன் !

புகைப்படம் எண் ஆறு : கஜேந்திரனின் முன்னே அழகேசன் ஆத்திரம் பொங்க கடந்து வந்து, அவரைச் சுடக் குறி வைக்கிருன் !

அக்கா, என்ன அப்படியே சிலபோல நின்று விட்டீர்கள் ? அத்தான் வெளியூரிலிருந்து திரும்பியவுடன் அழகியின் விடுதலைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் சீக்கிரமே செய்வீர்களல்லவா ? .
  • தம்பி, அழகியை அழகேசனிடமிருந்து விடுவித்து விடுவது பெரிதல்ல ; இந்தப் புகைப்படங்கள் மட்டுங்கூடப் போதுமே, அவ. ளுக்கு விடுதலை வாங்கித் தர ஆனால், அவளுடைய எதிர்காலத். இதப் பற்றியும் நாம்.யோசிக்க வேண்டாமா... ?? -
  • வாஸ்தவந்தான். எல்லாம் ஒரே குழப்பமாகவும் புதிராகவும். இருக்கிறதே?. ஒரு வேளை அழகியே தன் வருங்காலத்தைப் பற்றி ஏதாவது முடிவு செய்திருக்கலாம். அல்லது, செந்தாமரை, யிடம் சொல்லி இருந்தாலும் இருக்கலாம். நாளேக்கு செக்தாமரை நம் வீட்டுக்கு வந்தவுடன் நீங்களே இதைப்பற்றிக் கலந்து பேசுங் கள். ஒன்றிற்கும் உதவாத அப்பாவி மனிதன், அன்பு அன்பு என்று கதறுகிருன் , சர்வ வல்லமை பெற்ற ஆண்டவனே மனிதனுடைய முகாரியை ஆனந்த பைரவியாக ராகம் மாற்றி, அத்தோடு திருப்தி அடையாது, நிலை கொள்ளாமல் சிரிக்கவும் சிரிக்கிருன். இரண்டு பிரகிருதிகளுக்கும் நடுவே விதி கள்ளத்தனமாக நின்றுகொண்டு கைகொட்டிச் சிரிக்கிறது. ஆணுல் ஒன்று. அக்கா, இந்தப் படங். களை யெல்லாம் நானே பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டு. மென்பது கஜேந்திரனுடைய உத்தரவு. தப்பித்தவறி இப்படங்களை மறுபடியும் அழகிக்குக் காட்டி விடாதீர்கள் !’ என்றான் கரிகாலன்.

அழகு கிலா அமுதக்கதிர் வடிவெடுத்து வந்தது-அழகியைக் கண்டு ஆறுதல் சொல்ல. அழ்கி படுத்திருந்த இடத்தை நாடிச் சென்றாள் சுசீலா. திரும்பிப் பார்த்த கரிகாலன் முகத்தைத் திருப்பிக் கொண்டு வெளியே வந்தான். அழகியின் உடைகளைச் சீர் செய். தாள் சகோதரி ; பளிங்கு நெற்றியில் நிழலாடிய கறுப்பு இழைகளை ஒதுக்கிவிட்டாள். அவளுடைய விரல்களில் ஈரம் சுரந்திருந்தது. முகம் பூராவிலும் வியர்வை மணிகள் கோர்க்கப்பட்டிருந்தன. சுசீலா நல்ல மூச்சு விட்டாள். அழகிக்கு நல்ல மூச்சு வந்துகொண்டிருந்தது. விடிந்தது. கிழ்த் திசையில் ஞாயிறு தன் கேடில் சுடர் விடுத்தான் ! - . . . . . . . -

அழகி சோம்பல் முறித்துக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள். அவளுக்கருகே காப்பியும் கையுமாக சுசீலா கின்றாள். பின்புறம் சுசீலாவின் கணவர் ராமலிங்கம் வெற்றிலையின் நர்ம்பு களைப் பிரித்தபடி நின்றார், கரிகாலன் அப்பொழுதுதான் வீட்டிற்குள்