பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கன்னி வயதில் உன்னைக் கண்டதில்லையோ?” 73

ம் 13 *
 அழகியைப் பார்த்துப் பேச அனுமதி தருவீங்களா ?” * அவளை உங்களுக்கு எப்படித் தெரியும் ?” “ அவளும் நானும் எஸ். எஸ். எல். ஸி-யில் ஒரே செக்ஷன். அதோடு ஒரே ஊர். அது மட்டுமல்ல ; அவள் எழுதும் கதைக ளென்றால் எனக்குப் பிராணன். ‘
  • அப்படியா ? ரொம்ப சரி. அவள் எழுதியிருக்கும் அந்தி நிலா என்ற நாவல் முத்ல் பரிசு பெற்றிருக்கிறதே, தெரியுமா?

‘, ஓ, தெரியுமே!...பத்திரிகையில் பார்த்தேன்.”

  • சரி. அழகிக்கு கொஞ்ச நாளாக உடம்பு சரியில்லை. தஞ்சா ஆருக்கு அனுப்பி யிருக்கிறேன். எனக்கும் சில வாரமாக உடல் கலமில்லை. இப்போது ஏதோ கொஞ்சம் பரவாயில்லை. அடுத்த மாசம் வாருங்கள். அவசியம் பேசலாம்,’ என்றான் அழகேசன்அன்பு அமைத்துக் கொடுத்த பின்னணியுடன்.

அழகேசனின் பாதங்கள் மாடிப் படியில் பதிந்தன.

அன்பு, அன்பு என்று சில்ர் பேசுவார்கள் ; எழுதுவார்கள். ஆளுல், அதைக் கடைப்பிடிக்க மாத்திரம் கணக்காக மறந்து விடு வார்கள். ஒரு வேளை, நெஞ்சில் நஞ்சும் உதட்டில் அமிர்தமும் பெற்ற பெரிய மனிதர் ‘கள் பட்டியலுக்குரியவர்தானே இவ ரும்... ? -

சொல்லாமல் கொள்ளாமல் நழுவி ஓடிவிடத் துடித்தாள் தாமரை: அட கடவுளே... இந்தப் பைத்தியத்திடம் யார் மாரடிப்ப தாம்? .

ஆல்ை, இந்தப் பைத்தியத்தைக் கண்டு பேச ஒரு நாளா, இரண்டு நாளா, பல வாரங்களாக அல்லவா அவள் திட்டம் போட் டிருந்தாள் ? மனித மனம் எண்ணுவதற்கு ஒ. கே. சொல்லும் பண்பாடு, இந்தத் தெய்வ மனத்துக்கு என்றைக்குத்தான் உதய மாகுமோ ? . . . . .

அவள் மனம் பல்லீங் சடுகுடு” விளையாடியது ; கோட்டைத் தாண்டி விழுந்தது ; தோல்வி : செந்தாமரைக்கு அழுவதா, சிரிப் பதா என்று தோன்றவில்லை. - - -

அழகியின் இருப்பிடத்தை இவரிடம் சொல்லிவிட்டால் என்ன ? ? என்று யோசித்தாள் தாமரை. பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடிந்து விட்டால் என்னுவது ?’ என்ற அச்சம் அவ. ளுக்கு அபாய அறிவிப்புக் காட்டியது. அழகேசனின் நிழல் பட்

5 - ... . . . . . . . . . .