பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஜாதி ரோஜா

டால் கூட என் உயிர்ப்பூ வாடிக் கருகிவிடும் , தயவு செய்து அவரிடம் என்கினக் காட்டிக் கொடுத்து விடாதே 1 என்று அழகி அன்று கெஞ்சிய வார்த்தைகளை அவள் மறக்கமுடியுமா?

இப்போது செந்தாமரைக்குத்தான் கிறுக்குப் பிடித்துவிடும் போலிருந்தது. -

சிவனே என்று அங்கிருந்து ஓடிவிட எண்ணி மறுகி மறுகி நடந்து கொண்டிருந்தாள். மாடிப் படியிலிருந்து கிளம்பிய புகைச் சுருள்கள் சங்கிலிக் கோர்வையாக இணைந்து கைகுலுக்கிக் கொண்டன. .

  • அம்மா !” என்ற சன்னக் குரல் கேட்டது. வேலைக்காரி தொடர்ந்தாள் : அம்மா, எங்க ஐயாவுக்கு புத்தி தட்டுக் கெட்டுப் போயிடுச்சு. ஒரு பொழுதுக்கு இருக்கிற புத்தி அடுத்தாப்பிலே இருக்கிறது கிடையாதுங்க, அவரைப் பார்த்தா யாருமே சம்சயப் படவே இயலாது. இப்போதான் கொஞ்சம் எழுந்து நடமாடு ருங்க. மலையாளத்தார் வந்தார்; வேறே யாரோ வந்தாங்க : டாக் டர் பத்துப்பேர் வந்தாங்க. எப்படியோ ஒரு மாதிரிமயக்கம் வர்றது மட்டும் கின்னு போச்சு. ஆன, இந்த மாதிரிப் புத்தி தடுமாற்றக் தான் இப்போ புது வியாதியா வந்திருக்குது. கோட்டையிலே பொறந்தாலும் போட்ட சுழி தப்பியா போயிடும் ? ஆளு ஒரு நல்ல சேதி அம்மா ! இப்போ எங்க சின்ன எஜமான் சதா அழகி, அழகி"ன்னு புலம்பிக்கினு இருக்கிறதை நான்கூட அடிக்கடி கேட்டுக்கிட்டு வர்றேனுங்க... என்னம்ோ, கற்பகாம்பா கிருபை யாலே அழகி அம்மா இங்கே வந்து ஐயாவோடே சேர்ந்து இருந் திட்டாங்கண்ணு, அதுவே போதும் ; நீங்க பட்ட கஷ்டத்துக்கும் பலன் கிடைக்கும். பெரிய எஜமானர் ஐயாவுக்கு அழகி அம்மா வைப் பத்தின கவலேதான் பூராவும் . அதுதான் அவரைப் படுக் கையிலேகூடத் தள்ளிடுச்சு... ! ? -

அழகேசன் ரேடியோவின் விசையைச் சரி செய்து கொண் டிருந்தான். ரேடியோ பாடிற்று. . . . . கன்னிவயதிலுனைக் கண்டதில்லையோ-கன்னங் கன்றிச் சிவக்க முத்தமிட்டதில்லையோ? . அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை-இரண்டு ஆவியுமொன்றாகுமெனக் கொண்டதில்லையோ? ஜீவநாதம் கின்றது. அழகேசன் விம்மிக் கொண்டிருந்தான் : * அழகி. வந்தவர்கள் போனவர்களிடம் என் கெளரவத்திற்காக இப்ப்டி எத்தனை நாளைக்குத்தான் பொய் சொல்லித் தப்பிக்க முடி யும் ?. நாம் இரண்டு பேரும் புருஷன்-மனைவியாக ஆகவே முடியாதா...? .