பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கன்னி வயதில் உன்னைக் கண்டதில்லையோ?” 75

செந்தாமரைக்குத் தலை சுற்றியது.

அந்த நேரத்தில்- -

யாரோ சிலர் அதிர்ந்து நடந்து வரும் பூட்ஸ் சத்தம் எழும்பியது.

இங்கே ஒரு மைனர் வந்தானே, எங்கே அம்மா ? ’ என்ற சில குரல்கள் ஒரே மாதிரியான சுருதியில் ஒலித்தன.

கண்களைத் திறந்து பார்த்தாள் நர்ஸ் செந்தாமரை. போலிஸ் ஜவான்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை. யதேச்சையாகக் கிழக்கு மூலையில் திரும்பியபோது அங்கே ஓர் உருவம் தெரிந்தது. இமை பொருத்தி இமை பிரிக்கும் நேரம் அவளுக்கு உலக நினைவே உண்டாகவில்லை. மறுகணம், ஸார், இங்கே யாருமே வரவில்லை .. அடுத்த விட்டுப் பக்கம் ஒடிப்போன மாதிரி தெரிந்தது !...” என்று அழுத்தமாகக் கூறினுள்.

சட்டம் வேலி கட்டப் பார்த்தது. பாவம், வேலிக்குள் சட்டம் அகப்பட்டதுதான் மிச்சம்! -

நீங்களா ? மிஸ்டர் முரளியா? என்று கேட்க வாயைத் திறந்தாள். ஆனால், நாக்கு மேலண்ணத்தில் சமாதி அடைந்து விட்டது. - -

செந்தாமரை முரளியையே பார்த்தது பார்த்தபடி நின்றுகொண் டிருந்தாள் ; முரளி செந்தாமரையையே பார்த்தது பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். - -

அவள் கண்கள் முரளியின் கையிலிருந்த அந்த விளம்பரத் தைப் படித்தன. - .

என்ன, புதுக் குழப்பம் இது ? தமிழ்த் தொண்டு நாவல் போட்டியில் பரிசு பெற்ற அழகிக்கு.அழகேசன் தலைமையிலா பரிசு வழங்கப் போகிறார்கள் ?. அழகிக்கு இவ்விஷயம் தெரிந்தால், தமிழ்த் தொண்டு ஆபீசையே ஆட்டிப் படைத்து விடுவாளே ? தெய்வமே, முள் இல்லாமல் ரோஜாப் பூக்களைப் படைக்கப் பழகிக் கொள்ளக் கூடாதா ? ஐயனே, பதில் சொல்... ! ?