பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஜாதி ரோஜா

மணமகன் மணமகளைப் பார்த்தான் ; நகைக் கீற்று ஒன்று. பளிச்சிட்டது. விதியை நான் வென்றுவிட்டேன் ; விதி என்னிடம் தோற்றுவிட்டது ‘ என்ற அறிவிப்பு குரல் கொடுத்தது.

அவன் இப்பொழுது முழு மனிதனுக ஆகிவிட்டான்...!

மணமகள் குனிந்த தலையை உயர்த்தவே யில்லை. வெட்கமா..? நல்ல வெட்கம்! பாவம், வெட்கம் பூராவும் அப்படியே வியர்வையாக வழிந்தோடி விடும்போலிருக்கிறதே...?

மணப் பந்தலில் சிலர் வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டிருந் தார்கள், ஒரு பக்கம். அன்றைய அரசியல் உலகம் அவர்கள் முன் பம்பரமாகச் சுற்றியது ; சுழன்றது. அவர்கள். அந்த உலகத்தின் பாதத்தில் நின்று கொட்டாவி விட்டதுடன் சரி அமரர்கள் சிலருக் குப் புதுவாழ்வு கொடுப்பதில் ஒரு கும்பல் ஈடுபாடு செலுத்தி யிருந்தது; உயிரோடிருப்பவர்களுக்கு அமரத்வம் அளித்தது ஒரு கூட்டம்-அவர்கள் எழுத்தாளர்கள். ஒரு பகுதியில் சங்கீதத்துக்கு யோகம் பிறந்தது. நாகசுரம் மறந்துவிட்ட பாட்டை நினைவூட்டி, சராக சர்ச்சை புரிந்து கொண்டிருந்தனர் மூவர்-அது நாதபரம் பரை. ஆமாம்; அது பெண்டிர் குழாம். நாகரிகம் வள்ர, தாங்கள் வாழ்வதில் பற்று ‘க் கொண்டவர்கள் ஓரிருவர் ; ப்ெண்மை நிலைக்க, பெண்களாகக் காட்சியளித்தனர் மிகுதிப் பேர்.

  • அழகி அதிர்ஷ்டக்காரி : . . . .

அம்பிகைக்கு அவள் எடுத்துப்போட்ட பூ நல்ல பூ !’ கண் நிறைந்த கணவர்!’ கை நிறையப் பொன் ‘ அழகி-அழகுக்கேற்ற பெயர் !’ பெயருக்கேற்ற அழகு - * முதல் பிரம்மாவுக்கு இந்த இரண்டாவது பிரம்மா மீது அக் கறை இல்லாமல் இருக்குமா, என்ன் ?”

இலக்கணம் தவறுகிறது...!” ஒ. கே!...புரிகிறது. . . . .” --- அம்மணி பூங்குழலி, ஏதேது நீ கூட நம்ப அழகி மாதிரி, ததை கிதை எழுதப் போறியா, என்ன ? உன் அப்ப்ா கிட்டே’ சொல்லி இப்பவே ஒரு நூறு ரூபாய்க்கு வெறும் ஒரு அணு ஸ்டாம் பாக வாங்கி ஸ்டாக் பண்ணிப்பிடு. உங்கிட்டே பாதியும் பத்திரி. கைக்காரங்க கிட்டே பாதியுமாதப் பிரிச்சு அனுப்ப வேணுமா?... அதுமட்டும் போதாது. வெள்ளைத் தான் வேறே வேணும் ...ஒரு

பேல் பேப்பருக்: ம் ஆர்டர் கொடுத்திடச் சொல்லு. அப்படியே.