பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

வட ஆற்காடு ஜில்லா

இது பெருந்த தானிய வியாபாரம் நடந்துவரும் ஸ்தலம். முதல் முதல் குடியேறின இடம் இப்பொழுது ஒரு மஜராவாக ஏற்பட்டிருக்கும் "வேலப்பாதி" என்ற ஊர், வேல மரக் காடுகளின் மத்தியில் அமைக்கப்பட் டிருந்ததால் ஏற்பட்ட காரணபெயரே வேலப்பாதி யென்ற பெயராம். வேலூருக்கும் அப்பெயர் வந்திருக்க வேண்டும். விஜயநகர மன்னர்களது துர்க்கமாக ஏற்பட்டிருந்த காரணம்பற்றி ராயவேலூர் என்றழைக்கப்பெற்ற தெனவும் கூறலாம்.

பாலாற்றிற்குத் தெற்கில் சுமார் ஒருமைல் தூரத்தில் இந்த ஊர் பல சிறிய கிராமங்கள் அடங்கியுள்ளனவாக அமைக்கப்பட்டுளது. அதன் கிழக்குப் பாகத்தில் சிறு குன்றுகள் சில ஏற்பட்டிருக்கின்றன. அவைகள் சம தரை மட்டத்திற்கு சுமார் ஐந்நூறடி உயரம் வாய்ந்துள்ளதாக ஏற்பட்டுத் தென் கிழக்கு வடமேற்காக ஓடியுள்ளன. அவைகளின் வடமேற்கு கோடியில்தான் ராணுவஸ்தலம் ஏற்பட்டிருக்கிறது. பேட்டை என்ற சுதேசிகளிருக்கும் ஊர் அதற்கும் அங்குள்ள குன்றுகளின் அடிவாரத்திற்கும் இடையில் இருக்கிறது. இன்னும் தெற்கில் ஐரோப்பியர்களது விடுதிகள் அமைக்கப்பட் டிருக்கின்றன. அவைகள் ஊரின் மத்தியில் போகும் ஆரணி பெரிய ரஸ்தாவிலும், ஜெயிலுக்கு போகும் தொரப்பாடி ரோட்டின் இரு பக்கங்களிலும் ஏற்பட்டிருக்கின்றன.

இவ்வூர் அழகாக அமைந்த ஊரென்று சொல்லலாம். எல்லாப் பக்கங்களிலும் குன்றுகள் வாய்ந் திருப்படதுன் அனேகம் மாந் தோப்பு, தென்னந் தோப்பு, நாரத்தை மரங்கள் பயிரிடப்பட்டுள்ள தோட்டம், திராக்ஷைத்தோட்-