பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

வட ஆற்காடு ஜில்லா

நேயர் ஒரு குன்றில் தோண்டி ஹநுமந்த தீர்த்தத்தை உண்டாக்கினராம்.

இன்னு முள்ள பத்துப் பன்னிரண்டு தீர்த்தங்களைப் பற்றியும் கதைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகள் ஒன்றினருகில் வால்மீகி மஹரிஷி பல காலம் தவம் செய்த பிறகு ராமாயணத்தை எழுதும்படி கடவுளால் உத்திரவிடப்பட்டு அப்படியே செய்து முடித்தன ரென்றும் ஒரு கதையுண்டு.

1781-வது வருஷத்தில் சோளிங்கபுரத்திற் கருகில் கர்னல் கூட் ஹைதருடன் போர் புரிந்தான். அதில் ஹைதர் தோல்வி யடைந்ததாகச் சரித்திரம் கூறுகிறது.

வந்தவாசி (Wandiwash) : இவ்வூர் இப் பெயர் கொண்ட தாலூகாவின் பிரதான நகரம் என்றதுடன் தாசில்தார், சப் மாஜிஸ்டிரேட், போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலானோர்களது இருப்பிடமுமாக ஏற்பட்டுளது. வியவசாயிகளும் வர்த்தகர்களும் இங்கு அதிகம். போஸ்டாபீசும், தந்தி ஆபீசும் இங்கிருப்பதுடன், மருந்து கொடுக்கும் ஆஸ்பத்திரியும், பிரயாணிகள் தங்கும் பங்களாவும் சாத்திரங்களும் உள்ள ஒரு யூனியன். இவ்வூருக்கு வந்தவாசி யென்ற பெயர் வந்ததின் காரணமாவது ஜயகாந்தன் என்ற பாண்டிய மன்னன் நோயினால் பீடிக்கப்பட்டு வருந்திப் பற்பல இடங்களிலுள்ள கோவில்களை தரிசித்துக் கொண்டு வந்தும் பிரயோசனம் யாதும் ஏற்படாமலிருந்து வருந்துகையில் ஒரு கனவு கண்டனன். அதில் கண்டபடி ஒரு புற்றைத் தோண்டிப் பார்க்க அதற்குள் ஒரு சிவலிங்க மிருக்கக் கண்டு