பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்மி 1933 ஜனவரி 15ந் தேதிய "குடிஅரசு'" வாரப் பத்திரிகையில் வெளிவந்தது. 1. பச்சைக்குழந்தைக்குப் பாலுமில்லை - அதன் பட்டினியழுகை கேட்டதில்லை இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே கல்லில் இட்டு வணங்குகிறார் முத்திக் கென்றே. ஏழை யெளியவர் ஆடையின்றிக் கந்தை ஏற்றுடுத்தி மனம் ஏங்குகின்றார் பாழான கல்லுக்குப் பட்டாடைகட்டிடும் பக்தரெல்லாம் வெறும் பித்தரன்றோ. 8. கூழுக்கழு மக்கள் கோடியுண்டு -- நித்தம் கும்பியெரிபவர் கோடியுண்டு பாழுக்கழுகின்றார் சாமிக்கென்று கல்முன் பாற்சோறு பொங்கல் படைத்துமேதான். எண்ணெயற்றுத்தலை யீஞ்சுசெடி போன்றோர் எத்தனை கோடி இத்தேசத்திலே

128

128