பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணை மூடிக்கொண்டு எண்ணெய் குடங்குடம் கல்மேலே கொட்டும் கருத்தென்னவோ?

5. குள்ளக் குடிசைக்கும் குட்டிச்சுவருக்கும் கொஞ்சமல்ல மக்கள் கெஞ்சுகின்றார் உள்ளபொருள் எல்லாம் கல்லுத்தெய்வம் வாழ ஊட்டுகின்றார் கோவில் நாட்டுகின்றார்.

6. கஞ்சிக்குக்காணி நிலமில்லை- கையில் காசில்லை யென்பாருக் கெல்லையில்லை விஞ்சு கற்சாமி பிழைத்திடவே கோடி வேலி நிலமுண்டு விந்தையன்றோ?

7. சாமிக்களித்த வித்தேசத்து நன்மக்கள் சாகின்றார் பஞ்சத்தும் நோய்களிலும் சேமித்து நாம் நம்மைக்காத்திடுவோம் என்றும் சீவானந்தம் பெற வாழ்த்திடுவோம்.


129

..

129