பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் கட்சி கட்சியைக் காக்க உயிர் கொடுப்போம் காசு பணந்தந் ததை வளர்ப்போம் நிச்சயம் வெற்றிக் கொடி பிடிப்போம் நீசத் தடைகள் பொடி பொடிப்போம் அச்சமில் லாதுவி டாதுழைப்போம் அவசரச் சட்டம் அலற வைப்போம் கொச்சை மனிதர் கூற்றை மதியோம் குந்திப் பயந்து கொள்கை சதியோம் ஏகாதி பத்திய எதிர்ப்பினிலே என்றும் எவர்க்கும் முன்நிற்பதிலே வாகான ஒற்றுமை ஊட்டத்திலே வகுப்புவாத மற்ற நாட்டத்திலே நோகாத கும்பல் ஒழிப்பதிலே நொந்த உலகம் செழிப்பதிலே ஆஹாஎன் றேயெழும் எங்கள் கட்சி அடக்க முடியாத மக்கள் கட்சி கண்ணைத் திறந்தது எங்கள் கட்சி கருத்தை நிமிர்த்தது எங்கள் கட்சி

166

166