பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமதரும உலகம் இந்தப் பாட்டு 1935 - ம் ஆண்டில் தீட்டியது. ஓய்வு ஒழிவற்றச் சமதர்மப் பிரச்சாரம் ஒருபுறம், கிடைத்த சமதர்ம இலக்கியங்களை வெல்லாம் படிப்பது மறுபுறம்; இந்தப் போக்கு வாழ்க்கையை அடக்கியாண்ட காலத்தில் முளைத்தெழுந்த பாட்டு இது. சோவியத் அன்பரான மோரஸ் ஹிந்தஸ் (Morus Hindus) என்ற அமெரிக்க எழுதிய 'வேரோடு பிடுங்கி யெறியப்பட்ட மனித வர்க்கம்' என்ற நூலில் கண்ட சில கருத்துக்களை இந்தப் பாட்டு வடித்தெடுத்திருக்கிறது. இன்றுகூட உலகம் முழுவதும் நடைமுறையில், திட்ட வட்டமாக சமதர்மக் கொள்கையின் கை மேலோங்கி விட்ட இன்றுகூட கண்டதற்கெல்லாம், தோன்றியதற்கெல்லாம் சமதர்மம் என்று பெயர் சூட்டப்படுகிறதென்றால், 27ஆண்டு களுக்கு முன்னர் சமதர்மத்தைப் பற்றி எவ்வளவு குழப் அறியாமையும் இருந்திருக்குமென்று சிந்தித்துப் பாருங்கள்! அந்தச் சூழ்நிலையில் பாட்டில் விரவி நிற்கும் சம தர்மத்தைப் பற்றிய சுருக்க விளக்கத்தை மதிப்பிட வேண்டும். (விருத்தம்) வரும்நமது சமதரும வையம் தன்னில் வாழ்வுண்டு இன்பமுண்டு வளர்ச்சி யுண்டு பெரும்தொழில்செய் எப்பொருளும் பொதுவில் பிறர்கொழுக்கத் தொழிலாளர் வாட மாட்டார் 8-2 17

மாறும்

17