பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவனை ஏய்த் தொருவன்உண்ணும் உறுதொழிலில் உற்பத்தியில் குழப்ப மில்லை இருநிலத்தில் எண்டிசையும் வளமை துள்ளும் எழுதோழா எழுதோழா எழுவாய் இன்றே! கொள்கை சாகும் 2 வரும்நமது சமதரும வையம் தன்னில் வருத்திஅரித் திடுகின்ற வறுமை இல்லை பெருவாரி யின் நடுவில் காணும் இன்மைப் பேச்சில்லை தனிஉடைமைப் பித்தம் இல்லை பொருளாதா ரத்தில்சம உரிமை ஓங்கும் புதுமைவிஞ்ஞா னச்செழுமை கமக மக்கும் இருபாலார் சரிநிகராய் வாழ்வர் திண்ணம் எழுதோழா எழுதோழா எழுவாய் இன்றே! 3 வரும்நமது சமதரும வையம் தன்னில் வர்த்தகத்தில் போட்டியில்லை யுத்த மில்லை அரசியலில் தொழில்நாய கம்தான் மேவும் அடிமையுடன் மடமைமதம் அற்று வீழும் மருள் அகலும் தேசவெறி நிறபே தம்போம் மனிதசமா ஜம்மலரும் புனித வாழ்வாம் இருளகல ஞானஒளி எங்கும் வீசும் எழுதோழா எழுதோழா எழுவாய் இன்றே!

18

18