பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜன சமூகத் தேவை இந்தப் பாட்டு 1935-ல் எழுதப்பட்டது. "சமதர்மம் என்ற வார இதழில் வெளிவந்தது. தீவிரமான சமதர்மப் பிரச்சாரத்தின் நடுவே பிரச்சாரத் தேவையில் பிறந்தது இந்தப் பாட்டு. நெஞ்சில் ஈரமுள்ள, இன்றைய நிலைமையை உணர்ந்த, எந்தச் சோதரனும் சோதரியும் இந்தப் பாட்டை இசையும் உணர்ச்சியும் பொருந்தக்கேட்டு, கண்கலங்கி நீர்ச்சுரக்காது இருந்ததில்லை. புத்தியுள்ள தோழர் ஒன்று கூடும் புவி புகழும் சமதர்மம் கொண்டாடும் சத்தியனு சாரம் வேலைப் பாடும்-பலன் ஜன சமூகத் தேவையும் நாடும். காற்று நீரில் வேற்றுமையும் ஏது? - பொருள் காப்பதில் நுகர்வதில் ஏன் சூது? மாற்றுவம் பொது விலே இப்போது - ஆதால் மாந்தர்க் குறும் இன்பமே தப்பாது. உற்பத்தி அமோகமாம் பிரஸ்தாபம்-வயி றொட்டியவர் கோடி பரி தாபம் (புத்தி) - அற்பர் பணக்காரர் கொள்ளை லாபம் - நிதம் அடிப்ப தந்தோ கொடுமை பாபம். 31 (புத்தி)

(புத்தி)

31