பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயுடனே எச்சில் தின்கின் றாரே - மக்கள் நாளும் கஞ்சிக்காய் இரக்கின் றாரே நோயும் பசியும் கொண்டோய்கின் றாரே - போதும் நொந்த வாழ்வு இன்றே தடுப்பீரே. (புத்தி) ஒருமுழக் கந்த லற்றோர் கோடி- நாட்டில் ஒண்ட நிழல் அற்றுநிற்போர் கோடி வரும் துயரால் மடிவோர் கோடி - இங்கு வறுமை நிலவுதே கூத்தாடி. ராமிகள் மதங்கள் இருந்தென்ன?- ஒரு சர்க்காரும் மலைபோல் இருந்தென்ன? பூமியை உருட்டு வதாய்ச் சொன்ன - மத் போதனைச் சட்டங்கள் இருந் தென்ன? போலிகளைக் காறி உமிழ் வீரே - நேர்மை பொருந்தி உழைக்க வரு வீரே ஆல்அரசு போலத் தழைப் பீரே- போர் அறிந் தலைகள் போல் எழுவீரே. 32 (புத்தி)

(புத்தி)

32