பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுவுடைமை அறிக்கை வி ஞ்ஞான சோஷலிசத்தின் முதல் நூல் "பொது வுடைமை அறிக்கை" என்ற நூலாகும். மார்க்சும் ஏங்கல்சும் அதன் ஆசிரியர்கள். இந்த ஒப்பற்ற நூலைக் 'கீதங்களில் கீதம்' என்று சமதர்மிகள் உச்சிமேல் வைத்து மெச்சுகிறார்கள். உலகம், பொதுவுடைமை அறிக்கையால் உணர்ச்சி வடைந்து வாழ்க்கைப் பாதையில் முன்னேறியதைப்போல வேறெந்த நூலாலும் பயன்பட்டதில்லை. இந்த நூலின் இறுதி இரண்டு மூன்று வாக்கியங்கள் தான் இந்தப் பாடல். இந்தப் பாடல் விருத்த உருவத்தில் அமைந்திருக்கிறது. (விருத்தம்) புலமைசெறி ஆதிக்க வகுப்பா ரெல்லாம் பொதுவுடைமைப் புரட்சியினால் நடுங்கி வீழ்வார் அலக்கழியத் தொழிலாள ரைப்பி ணைத்த அடிமையெனும் சங்கிலிகள் அறுந்து போகும் பலவிதமாய் நலம்தருமோர் புதிய லோகம் பாட்டாளி மக்களவர் பாங்காய்ச் சேரும் உலகத்தில் எத்தேசத் தும்வாழ் கின்ற உழைப்பாளித் தோழர்களே ஒன்று சேர்வீர்!

39

39