பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடி வருவீர் (விருத்தம்) அறிவினைத் தூண்டாது மலைபோல மூளையை அமிழ்த்தும்சாத் திரமெரிப்பீர் ஆஷாட பூதிகள் பொம்மலாட் டங்களுக்(கு) அடிமையா காதுவாழ்வீர் வறியகுள் ளச்சமூ கந்தரும் கட்டுகளை மண்ணாய்ப் பொடித்தெறிகுவீர் வாழவொட் டாதரித் துண்ணும் விஷப்பூச்சி வன்புரோ கிதம்ஒழிப்பீர் மறியலே செய்துமுற் போக்கைத் தடுத்திட்ட மதம்எனும் பாம்பு கொல்வீர் மனிதரை விழுங்கிடும் தனிஉடைமை யாம்பேயை மண்டையி லடித்துமாய்ப்பீர் குறியோடு கொள்கையும் புதுஉலகு காண்பதில் கொண்டுநல் தொண்டுசெய்வீர் கோதிலாச் சமதர்மம் ஓங்குதற் கேயொன்று கூடிவரு வீர்தோழரே 41 (1985) ROJA MUTHIAM 47, HOSPITAL STREET

KOTTAIYUR - 623 106

41