பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சி வீரர்‌ கண்மணிநான்‌ ஜெயில்விட்டு முன்னம்வந்த நாள்‌ முதலாய்‌

கர்மவீரர்‌ அந்தமான்போய்‌ காவலில்‌ மடிகின்றாராம்‌ துன்பத்தில்‌ தவிக்கின்றாராம்‌ ஜென்மத்தைக்‌ கழிக்‌ கின்றாராம்‌

எந்தன்‌ நல்‌ தோழர்கள்‌ தூக்கு ஏறிய கதையின்‌ போக்கு ஏந்திழையே எந்தன்நெஞ்சை இரும்பாக்கி ஊக்குதடி! சிந்தையற்ற நீசர்கூட்டம்‌ இந்தியத்‌ துரைத்தனமே. பஞ்சையர்‌ பசியால்வாடி பரதவிப்‌ போர்கள்‌ கோடி பாரினில்‌ பெரும்புரட்சி நேராது விடியாதடி வஞ்சகத்‌ தலைவர்‌ வேண்டாம்‌ எங்கள்லெனின்‌ போதமடி, தூக்குமேடை நின்றசிங்கம்‌ தோன்றியநம்‌ நாடு பங்கம்‌ சூழும்படி யாய்நரிகள்‌ ஊளையிட்க்‌ கண்டோமடி ஏக்கமற வேபுரட்சி நோக்கும்வீரர்‌ இன்றுமுண்டு எங்களை மிரட்டுவோர்கள்‌ இப்புவியில்‌ உண்டோ பெண்ணே?

(1984)

52

52