பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"யாரைக் கேட்டுச் சுண்ணாம்பு அடிச்சான்? இரண்டு ரூபாயை எப்படி வாடகையிலே பிடிக்கலாம்? எனனடா கதை இது?"

"நான் சொல்லிப் பார்த்தேனுங்க...."

"அவர் மாட்டேன் என்று சொல்லிவிட்டாரு, நீங்க சரின்னு ஒப்புக்கிட்டிங்களா? ஏண்டா இப்படித் துரோகம் செய்யறிங்க! டே! இதோ பார். அந்த இரண்டு ரூபாயை வசூல் செய்தாகணும்; இல்லை, உன் கணக்கிலே பிடிச்சுடுவேன்"

இந்த அன்புக்குப் பிறகு, வட்டி செலுத்தினார், செலுத்தவேண்டியவர். பகல் சாப்பாடு கடைக்கு வந்தது செட்டியார் சாப்பிட்டு முடித்தார். பையன் இடத்தைச் சுத்தம் செய்தான். குமாஸ்தா கை அலம்பத் தண்ணீர் கொட்டினான். மற்றொரு குமாஸ்தா, துடைக்கத் துணி கொடுத்தான். இதற்குள், மெத்தை இதற்குள், மெத்தை விரிக்கப்பட்டது. செட்டியார் சிரமபரிகாரம் செய்து கொண்டார். பையன் விசிறினான். மாலை சுமார் 5 மணிக்கு எழுந்தார். குமாஸ்தாவை மருந்துக்கடைக்கு அனுப்பினார். பையனை விட்டு, வக்கீல் குமாஸ்தாவை வரவழைத்துப் பணம் கொடுத்தார். காவல்காரச் "சோம்பேறி" இதற்குள், வயல் வேலையை மேற்பார்வை செய்துவிட்டு, வயிற்றுக்குக் கொஞ்சம் கஞ்சி சாப்பிட்டுவிட்டு, தோட்டத்து இளநீரைச் சுமந்துகொண்டு வந்து, செட்டியார் தூக்குவது தெரிந்து, பங்களா சென்று அங்கு, வேலைகளைக் கவனித்துவிட்டு,

வந்து சேர்ந்தான். அவனிடம் பணம் வீசினார். வீட்டுக்குப் புறப்படும் சமயம், குருக்கள் வந்து சேர்ந்தார். செட்டியார் குளிர்ந்த முகத்துடன் அவரை வரவேற்றார். சத்கதாகாலட்சேபம் நடைபெறலாயிற்று.

20