பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செட்:- சாமி! வாங்க! எங்கே உங்க தரிசனமே கிடைக்கறதில்லை.

குரு:- நன்னா சொன்னேள்! செட்டியாரவாளுடைய பேட்டி தான் கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கு.

செட்:- சிவ! சிவ! என்னங்க சாமி ! நம்மைப் பத்தி அவ்வளவு பிரமாதமாப் பேசறிங்க.

குரு:- நான் மட்டுமா? செட்டியாரவாள்! நேத்தி சாயரட்சை கமலா என்ன சொன்னா தெரியுமோ?

செட்:- கமலாவா? அவ, என்னைப்பத்திக்கூடப் பேசுறாளோ?

குரு:- பேஷ்! உம்மைப்பத்தி பேசறாளான்னுவேறே கேக்கறேளே? என்ன சொக்குப்பொடி போட்டேளோ தெரியல்லே, சதா உம்ம கவனம்தான் அவளுக்கு

செட்:- சும்மா விளையாட்டு.

குரு:- பிரமாணமாச் சொல்றேன்.

செட்: சிவ! சிவ! சரி, என்ன சொன்னா?

குரு:- செட்டியாரைப் பார்க்கிறதுன்னா, காஞ்சி கருடசேர்வை போலிருக்குன்னு சொன்னா

செ:- அப்படியா சொன்னா, கமலா,எப்பவும் பேசறதிலே ரொம்ப சாமார்த்தியம்.

குரு - அதென்ன அப்படிச் சொல்லிட்டேள்? பேச்சிலே மட்டுந்தானா?

செ:- எதலையுமே தெளிவுதான்.

குரு :- யார் இருக்கா இந்த ஊரிலே அவளாட்டம் பாட......

21