பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செட்:- நாட்டியங்கூட........

குரு:- நடறாஜ தாண்டவந்தான்.

செட்:- நல்ல சுபாவந்தான்; ஆனா பணத்திலேகொஞ்சம் நிகா.

குரு:- அது சகஜம்; செட்டியாரவாள்! நாளைக்குப் பஞ்சாமிருத அபிஷேகத்துக்கு அவளும் வர்ரா.

செட்:- பலே! அப்ப, ரொம்ப ஜோராச் செய்துடனும்.

குரு:- பிரம்மா நினைச்சா ஆயுசுக்குக் குறைவோ?

செச:- (குமாஸ்தாவைக் கூப்பிட்டு) ஐயரிடம், ஐம்பது ரூபா.....

குரு:- இன்னம் ஒரு இருபத்தைந்து சேர்த்துத் தாருங்கோ.

செட்:- அவ்வளவுக்குச் செலவு இருக்கோ?

குரு :- எல்லாம் அவளும் நானும் சேர்ந்து பட்ஜட் போட்டிருக்கிறோம்.

செ:- அப்போ அதுக்கு அப்பீல் கிடையாது!

ஐயர் எழுபத்தைந்து வாங்கிக்கொண்டு போனபிறகு,செட்டியார் கடைவீதிப் பக்கம் தமாஷாக நடந்து போய், நண்பர்களைக் கண்டு பேசிவிட்டு, வீடு சென்றார்.


22