பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“இதுதானே! எத்தனை ஆயிரம் நோடீஸ் வேண்டும், சார்” என்று வெற்றிவேல் அச்சுக்கூடத்து மானேஜர் கேட்டார்.

“வேண்டாம் சார்! நான் நோடீஸ் அச்சடிப்பதாக இல்லை“ என்று நான் சொன்னேன்.

“வேலை சுத்தமாக இருக்கும் சார்! ஒரு சான்சு எங்களுக்குக் கொடுத்துத்தான் பாருங்கள்“ என்று அவர் மன்றாடினார். என்ன செய்வதென்று தெரியவில்லை! சரி என்றுvவேறோர் காகிதத்தில் கீழே கண்டவாறு எழுதி 10000 காபிகள் தயாரிக்கச் சொன்னேன்.

வேஷதாரிகளை நம்பாதீர்

பகுத்தறிவுள்ளவர்களே!

சாது, பண்டாரம், யோகி, என்று கூறிக்கொண்டும் காஷாயம் தரித்துக்கொண்டும்,ரசவாதம்,மாந்தரீகம், தெரியுமென்று சொல்லிக்கொண்டும், சர்வரோகநிவாரணி சூரணம், சகல சித்தி லேகியம் தருவதாகக் கூறிக்கொண்டும், அன்னதானம், அபிஷேக ஆராதனை செய்வதாகச் சொல்லிக்கொண்டும், ஆஸ்ரமம் வைக்கிறேன், அருள் தருகிறேன் என்று பேசிக்கொண்டும் வரும், வேஷதாரிகளை நம்பாதீர்! நம்பாதீர்! நம்பாதீர்!! காசு தராதீர் - காலில் விழாதீர்!

அவ்வித வேஷதாரிகள் வேலை, சிங்கப்பூர்சொக்கன் அன்னதானம் செய்வதாக நடித்து, சொர்ணவர்ண லேகியத்தில் அபின் கலந்து விற்று, தர்மபூபதி என்று பட்டம் பெற்று, பிறகு போலீசாரால் விரட்டப்பட்டு ஓடிச் சுற்றுப் பக்கத்திலே, சுந்தரபுரியில் சாது வேஷம் போட்டுக்கொண்டு சாது சேவாகிரமம் வைப்பதாக ஏமாற்றியது போல ஒரு ஏமாற்று வேலையாகவே இருக்கும். ஆகவே, அறிவுள்ள

40