பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்ணாவிரதம்

ஒரு தண்டனை!

"ழுந்திருக்கப்படாதோ, சாப்பாட்டுக்கு! நேரமாகவில்லையோ? ஓயாது, வளவளன்னு வாயாடிண்டே இருக்கேள். இந்த அடுத்தாத்து அழுமூஞ்சி வந்தாலே இப்படித்தான் ஆறது. அதுக்குத்தான் வீடு வாசலைப் பத்தின கவலையே சிடையாது; நீரும் அப்படித்தானோ" என்று சகதர்மிணி சற்று காரசாரமாகப் பேசி, சாப்பாட்டுக்குச் 'சம்மன் சார்வு' செய்தது கண்ட, சாட்சாத் சனாதனி கோபத்தைச் சோகத்தால் மறைத்துக்கொண்டு, "நேக்கென்னமோ வயத்தைப் பசிக்கல்லே,போய் சாப்டூட்டுப் படுத்துத் தூங்கு, உசிரை வாங்கிண்டு இராதே" என்று கூறினார். சத்தர்மணிக்குக் கோபம் குறைந்து, புருஷன் மீது கொஞ்சம் கனிவு பிறந்தது. "கொஞ்சம், விளாங்காயளவு சாப்டூட்டுப் படுத்துத் தூங்குங்கோ. இராத்திரியிலே, வெறுமனே படுத்தா வயத்தைப் பிறட்டுமே" என்று கெஞ்சினாள், கொஞ்சம் கொஞ்சுதலையும் கூடக் கலந்து உண்மைதானே, நடுநிசியிலே, இந்த நாசமாப்போன பசி வந்தால் என்ன செய்வது, அது வந்தால் பத்தும் பறக்குமே என்று பயந்தார். ஆனால், அடுத்தாத்து ஐயருக்குக் கொடுத்த வாக்குறுதியையோ, மீற முடியாது. மீறினால் சூளத்தங்கரையிலே அமளிபடும். இருபுறமும் இடி. சனா-

42