பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்னா தலையிலே தேச்சி, முழுகுங்கோ!" என்று சகதர்மணி வைத்யமே கூறிவிட்டாள். "போதும் வாயை மூடிண்டு போடி! புருஷாளுடைய கையை எதிர்பார்த்து இருக்கும் போதே, இத்தனை கெர்வமிருக்கு. வாயிருக்கு. இவாளுக்குச் சொத்து பாத்யதை வேறே தேவையாம்! கலி முடிஞ்சும், இந்தச் சனியன் பிடிச்சவா தொல்லை தீரவில்லை! என்றார். சனாதனி,"என்னத்தைக் குளறிண்டிருக்கேர்? நேக்கொண்ணும் புரியல்லையே?" என்று சகதர்மிணி கேட்டாள். "இந்த சர்க்கார் இருக்காளேன்னோ, அவ இப்ப அபூர்வமா ஒரு யோசனை சொல்றா. ஸ்திரிகளுக்குச் சொத்து பாத்யதை தரணுமாம். ஒரு குடும்பத்திலே, ஆண்தானே ஆளப் பிறந்தவாளுன்னு ஆகிநாட்களிலிருந்து சொல்வா. இஷ்வாகு பரம்பரையென்ன, இரகு வம்சமென்ன, முனிவர்களென்ன, இவாளுடைய முறைகள் தவறாம். இப்போ, பெண்களுக்கும் சொத்து தர சட்டம் கொண்டுவரப் போறா. அதைக் கண்டிக்க, நாங்க தீர்மானிச்சுட்டோம், உண்ணாவிரதம் அதுக்காகத்தான்" என்றார் சனாதனி, ரோஷத்தோடு. சகதர்மிணிக்குச் சிரிப்புக்குப் பதில் சீற்றம் பிறந்தது. முந்தானியை இழுத்துச் செருகினாள். தொண்டையைக் கனைத்தாள். பெண்களுக்குச் சொத்து வாரிசு கூடாதா? அதுக்காக உண்ணாவிரதம் இருக்கேளா? ரொம்ப சரியாச்சி. பெண்களை, இந்த ஆண்கள், ஆதிநாட்களிலிருந்து படுத்தின பாடு இருக்கே, அதுக்கு, 'இந்தப் பெண்களுக்கு மட்டும், ரோஷம் மானம் இருந்திருக்குமானா நிரந்தரமா உண்ணாவிரதம் இருக்கும்படியா ஆண்களைச் செய்திருக்கணுமே. உண்ணாவிரதமா இருக்கப் போறேள்! ஊர் நாடு கேட்டுச் சிரிக்கட்டும், இப்படி அழுக்கு மூட்டைகள் இந்தக் காலத்திலேயும் இருக்குமோன்னு? சாட்சாத் அவதாரமுன்னு கொண்டாடும் இராமன் முதற்கொண்டு,

44