பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சகதர்மிணி பெண் சிங்கம்போலக் கர்ஜித்தாள். "பேசுவது நீ இல்லையடி, காலமென்னும் பேய் பேசுகிறது. துர்ப்பாக்கியம் உன் மூலமாக உலகுக்குத் தூது விடறது. தமயந்தி, சாவித்ரி,நளாயனி முதலானவா ஜனித்த புண்ய பூமியிலே, இந்தக் காளன்கள் முளைச்சிருக்கு" என்று ஐயர்,வாதத்தை நிறுத்தி, விசாரத்திலே பேச்சைத் திருப்பினார். வாயை அடக்கிவிட்டோம் என்ற பூரிப்புடன், சகதர்மிணி, "ஆண்களுக்குத்தான் சொத்து உண்டு, பெண்களுக்குச் சொத்து கூடாது எனப் பேசுகிறவாமடையரேன்னோ? தாய் வயிற்றிலே பிறந்து, தாய்க்குலத்துக்கே துரோகம் செய்து செய்துதான், தர்மமே க்ஷிணித்துவிட்டது, இந்தத் தேசத்திலே. பெண்ணாப் பிறந்தா, என்ன பாவமோ? பெண்ணில்லாமே ஆண்கள் வாழுவாளோ? வாழ்றது கிடக்கட்டும்! இவாளுடைய ஜெனனமே, பெண்களால்தானே? சொத்து இவாளுக்கு, சுகம் இவாளுக்கு; உழைக்க நாங்க. இந்தக் கேடுகெட்ட புத்தி இருக்கும் வரையிலே, நாடு உருப்படாது, நாசமாகத்தான் போகும்" என்று சபித்துவிட்டு, மறுபடி, சாப்பிட வருகிறீரா என்று கணவரைக் கூப்பிடாமல் சென்று, சம்பா சாதத்திலே கொத்தமல்லித் துவையலைக் கலந்து, நாலு கரண்டி நெய் வார்த்துக்கொண்டு சாம்பாரையும் கொஞ்சம் சுவைத்துத் தின்றாள். பிறகு, சாம்பாரைச் சாதத்துடன் கலந்து, வற்றலை நறநறவெனக் கடித்தாள். அந்தச் சத்தம் கூடத்து ஊஞ்சலில் சாய்ந்துகொண்டிருந்த சனாதனசர்மாவுக்கு, ஜெர்மன், ஜப்பான் வெடிகுண்டு சத்தத்தைவிட வேதனையைத்தான் தந்தது. ஆனாலும் பாவம், அவர் என்ன செய்யமுடியும்? வாக்குக் கொடுத்து விட்டாரே!

இந்திய மத்ய சட்ட சபையினர், பெண்களுக்கும், ஆண்கள் போலவே சொத்துரிமை தரவேண்டும் என்ற

46