பக்கம்:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முயற்சி செய்வது, இந்நாட்டிலே உள்ள, கேது ராகுக்களுக்குப் பிடிக்கவில்லை. சாஸ்திரம். தருமம் என்ற சாக்குவைத்துக்கொண்டு, சளகளவெனப் பேசலாயின. இந்த வைதீக வறட்டுக் கூச்சலை யாரும் பொருட்படுத்துவதாகக்காணோம். எனவே, சக்தியால் சாய்க்கமுடியாததை, யுக்தியால் சாதிக்க யோசித்து, உண்ணாவிரதம் இருப்பது என்று, லட்சுமணபுரி வைதீகப் பிரகிருதிகள் தீர்மானித்தனவாம். பெண்களுக்குச் சொத்துரிமை தருவதைத் தடுக்க, இந்த வீரர்கள், இவ்வழியைக் கண்டுபிடித்தது கண்ட, அவர்களின் சகதர்மிணிகள், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் மசோதா நிறைவேறித்தானாக வேண்டும், அதற்காக, நாங்கள் உண்ணாவிரதமிருக்கப் போகிறோம் என்று கூறிவிட்டு, அனுமார் ஆலயத்திலே பூஜை செய்துவிட்டு உண்ணாவிரதத்தைத் துவக்கினர், என்று ஓர் செய்தி, 15—10—43 சுதேசமித்திரனில் காணப்படுகிறது.

நமது கதையிலே, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சனாதன சர்மா, அந்த ரகம்! அவரும், உண்ணாவிரதம் இருக்கலானார், சில பழய பஞ்சாங்கங்களின் தூண்டுதலால்.லட்சுமணபுரி சனாதனிகளின் மனைவிமாரைப் போன்ற பைத்யமல்ல, நமது கதையிலே வரும், அம்மையார். பெண்களுக்குத் துரோகம் செய்யும் பேர்வழிகள், உண்ணாவிரதமிருப்பது, அவர்கள் அடையவேண்டிய தண்டனையே அனுபவிக்கட்டும், நமக்கென்ன, என்று எண்ணி வழக்கமாகச் சாப்பிடுவதுபோல் அன்றும் அந்த அம்மையார் சாப்பிட்டார்கள். வாயினால், வயிற்றுக்கு வம்பை வருவித்துக்கொண்ட சனாதன சர்மா, சாம்பாரின் சுவையையும், துவையலின் மணத்தையும், வற்றலின் மொறமொறப்பையும், எண்ணினார் ஏங்கினார். தூங்கினால் துயரம்போகும் என்றெண்ணிக் கண்ணை

47