பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 179

தால்தானே தொலைவும், நடக்கிற கஷ்டமும் ? வழியிலே வர் ற சிரமமும் பெரிசாய்த் தெரியும் ?”

“சரி அது முன்னாடிச் சமாச்சாரம். இன்னம் கூட எய்ம்’ இல்லேங்கறது நல்லதா ?”

“இன்னம் கூடன்னா ?” “கல்யாணத்துக்குப் பிறகு கூட !”

“கல்யாணத்துக்குப் பிறகு என்ன எய்ம் ?” “குழந்தை பெத்துக்கறது...’ “ஆசையா இருக்கா : ரங்கா குழந்தைக்கு ?”

“உனக்கு இல்லையா. விஜி ?”

“இல்லை, ரங்கா !”

“அப்ப, வேண்டாம்னே வச்சுடுவோம் !”

“ச்சேச்சே...வந்ததுன்னா சரி , வரல்லேன்னாலும் gf I...”

“புடவை ரவிக்கைக்கு ஆசைப்படாமல் இருந்தது சரி: எப்படி குழந்தை குடும்பம் கூட ஆசையற்றுப் போகும் ? தெரியலையே ?”

“ஆசையைப் பிரிச்சுப் பிரிச்சு இதில வேண்டாம்... அதுல வேண்டாம்’னு வச்சுக்க முடியுமா ? பிரிச்சு வச்சுண்டா போலி ஆகிடாதா ?”

“மனுஷா மேலே நம்பிக்கை போயிடுத்து இல்ல உனக்கு ?” - . . . , .

நோ!...ஒரு நாளும் இல்லை!"