பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

வி.ஜி தனக்குத்தானே கேட்டுக் கொள்கிறாள் இப்போது : என்னை மாற்றியது யார் ? நாகப்பனா ? வில்லிங்ஸ்டனா ? ராம் குமாரா ? பிச்சையா ? ரங்காவா ? இல்லை, என்னுள் கிளர்ந்த நானேதானா ? இது ஒட்டு மொத்தமும் சேர்ந்து இன்றைய எச்சமா ...?

விஜியின் சுயப்பரிசோதனை தொடர்கிறது ; தொடர் சேர்க்கிறது: அப்படியென்றால், நாகப்பனே நமஹ’ என்று தானே சொல்ல வேண்டும்? சொல்லுவோமா ?-- நாகப்பனே நமஹ !... என் விரல்களை மெல்ல முக்தமிட்டுக் குளிர்வாய் பேசின இளைஞனே, என்னால் உந்தப்பட்டு என்னிலும் உயர்வானவனே, போற்றி !... வில்லிங்ஸ்டனே நமஹ ...இசையில் நரைந்து மீண்டு, இசையை விலக்கி, எதுவரினும் சரி என்ற தன்மைக்கு நகர்ந்து, அன்பைச் சொல்வது மட்டும் வேலையாகிப் போன நண்பனே, போற்றி!... ராம்குமாராய நமஹ !-- கரைந்தொழுகிப் பெண் உடம்பைக் காதலென்று கனவு கண்டு, என் நிர்வாணம் தெரிந்து...’

அப்போது:

ரங்கா குறுக்கிடுகிறார்: “இங்க எல்லா விஷயமும் குட்டிச் சுவர்னு நினைக்கறதினாலேதான் இப்படித் தோண்றதா “

“நான் அப்படி ஒண்னும் கமெண்ட் அடிச்ச தில்லையே?”

“ஆசையிருந்தா ஆசை வந்ததுன்னா, பொறுப்பு சுமக்கனும். பொறுப்புச் சுமக்காமல் இருக்கறதுதான் ஆசையாயிடுத்து இல்லையா ?” -

“என்ன, திடீர்னு எம்மேலே கோபம் ?"